

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கிய , 20 - வது ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு நிகழ்வில் இந்தியா இதுவரை 10 தங்கப் பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2026 ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 43 விளையாட்டுகள் 71 பிரிவுகளில் கீழ் நடைபெறுகின்றன.
இந்தியா இன்று (செப்.30)மாலை 6 மணி நிலவரப்படி , இதுவரை தங்கம் 10 ,வெள்ளி 21 , வெண்கலம் 29 என பதக்கப் பட்டியலில் முன்னேறி வருகிறது. இறுதியாக நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தங்கம் 28 , வெள்ளி 38 , வெண்கலம் 40 என்று மொத்தமாக 106 பதக்கங்களை வென்று 4 இடத்தை பிடித்திருந்தது.
வில்வித்தை போட்டியில் இந்திய குழுவினர் 3 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் இந்திய அணியை 7 இடத்திற்கு முன்னேற்றினர்.
காம்பவுண்ட் ஆடவர் வில்வித்தை குழுப் போட்டியில், குஷால் தலால், சாஹில் ஜாதவ் மற்றும் கணேஷ் மணி ரத்னம் திருமூரு ஆகியோர் சீனாவை 238-237 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
மகளிர் வில்வித்தை குழுப் போட்டியில் சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் தங்கம் வென்றனர். இதை தொடர்ந்து சிகிதா- சாஹிலுடன் இணைந்து கலப்பு வில்வித்தைக் குழுப் போட்டியில் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார்.
துப்பாக்கிச் சுடுதலில், இந்திய டிராப் கலப்பு அணி கினன் செனாய் மற்றும் நீரு தண்டா ஆகியோர் இணைந்து தங்கம் வென்றனர்.
குத்துச்சண்டை பிரிவில் , பிரியா காங்காஸ் 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். ஆடவர் குத்துச்சண்டை பிரிவில் கபில் பொக்காரியா இரண்டாவது வெண்கலம் வென்றார்.
கிரேக்கோ-ரோமன் 87 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை சுனில் குமார் வென்றுள்ளார். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு கிரேக்கோ-ரோமன் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சுனில் குமார் படைத்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளியை உறுதி செய்த இந்திய மகளிர் ஹாக்கி அணி. இன்றையப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். சீனாவை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.