

ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயாவில் 20 - வது ஆசியன் விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கப் பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 8- வது இடத்தில் உள்ளது. 2026 ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 43 விளையாட்டுகள் 71 பிரிவுகளில் கீழ் நடைபெறுகின்றன.
இந்தியா இன்று (அக்டோபர் 1) மாலை 6 மணி நிலவரப்படி , இதுவரை தங்கம் 10 ,வெள்ளி 23 , வெண்கலம் 31 என பதக்கப் பட்டியலில் முன்னேறி வருகிறது. இறுதியாக நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தங்கம் 28 , வெள்ளி 38 , வெண்கலம் 40 என்று மொத்தமாக 106 பதக்கங்களை வென்று 4 இடத்தை பிடித்திருந்தது.
இன்றைய நாளில் முதல் பதக்கமாக பாய்மரப் படகு போட்டியில் இந்திய அணியை சேர்ந்த மனு பிரான்சிஸ், பிரின்ஸ் குரிஞ்ஸ்சிகல் நோபில் ஆகியோர் அடங்கிய வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
ஆடவர் கிரேக்க ரோமன் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் நிதிஷ் இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தனி ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் கணேஷ் மணி ரத்னம் வெண்கலம் வென்றார்.
ஸ்குவாஷ் பெண்கள் போட்டியில் குழு இந்தியா அணி( ஜோஷ்னா சின்னப்பா. தன்வி , அநகத் சிங் ) வெண்கலம் வென்றது. அதே போல் ஸ்குவாஷ் ஆடவர் போட்டியில் குழு( இந்தியா அணி வெண்கலம் வென்றது.
கிரேக்க ரோமன் 87 கிலோ ஆடவர் மல்யுத்த பிரிவில் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவில் பிரியா கங்காஸ் வெண்கலம் வென்றார். ஆடவர் குத்துச்சண்டை 90 கிலோ பிரிவில் கபில் போகாரியா வெண்கலம் வென்றார். மேலும் குத்துச்சண்டை 90 கிலோ பிரிவில் இன்னொரு இந்திய வீரரான நரேந்திர பேர்வாலும் வெண்கலம் வென்றார்.
இந்திய ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று வெள்ளிப் பதக்கம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானை வெல்லும் பட்சத்தில் தங்கம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இன்றையப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த யாரும் தங்கம் வெல்லாததால் , பட்டியலில் முன்னேற்றம் இன்றி 8 வது இடத்தில் இந்தியா உள்ளது.