பாரா ஆசிய விளையாட்டு 2026: 87 பதக்கங்கள் வென்று அசத்தல்! 5-வது இடத்தில் இந்தியா..!!

ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனக் குவித்து இந்திய வீரர்கள் புதிய சாதனை!
Para asian games
indian ArcherESPN
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

2026 ஆம் ஆண்டிற்கான பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் அக்டோபர் 22 ஆம் தேதி முடிவில் இந்தியக் குழுவினர் பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் பெற்றுள்ள பதக்கங்களின் பட்டியல் பின்வருமாறு

தங்கம் - 20

வெள்ளி - 26

வெண்கலம் - 41

அதே நேரம் பதக்கப் பட்டியலில் சீனா மற்றும் ஜப்பான் தொடர்ச்சியாக முதலிடத்தையும் இரண்டாம் இடத்தையும் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பாரா தடகளம் - தங்கம் 5 , வெள்ளி 2, வெண்கலம் 3

1.மகளிர் வட்டு எறிதல் F54 பிரிவில் சுவர்ணா ராஜ்,

15.66 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

2. மகளிர் 400 மீட்டர் T47 பிரிவில் அஞ்சனாபென் பும்பாடியா தங்கப் பதக்கம் வென்றார்.

3. ஆடவர் உயரம் தாண்டுதல் T63 பிரிவில், சைலேஷ் குமார் 1.89 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

4. ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் வருண் பாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

5. இதே பிரிவில் ராகுல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

6.மகளிர் 400 மீட்டர் T12 ஓட்டப் பந்தயத்தில், தேஜல்பன் டாமோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

7. ஆடவர் 400 மீட்டர் T47 இறுதிப் போட்டியில் திலீப் காவிட் தங்கம் வென்றார்.

8. ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​S13 இறுதிப் போட்டியில், ரவி கார்த்திக் புடிகினா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

9.மகளிர் 400 மீட்டர் T11 இறுதிப் போட்டியில் ராவணி வலசனைனி வெண்கலப் பதக்கம் வென்றார்.

10. ஆடவர் நீளம் தாண்டுதல் T44/T62/T64 இறுதிப் போட்டியில் சோலைராஜ் தர்மராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

பாரா வில்வித்தை - தங்கம் 2 , வெள்ளி 1

1.காம்பவுண்ட் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில்

ஷீத்தல் தேவி தங்கப் பதக்கத்தை வென்றார்.

2. காம்பவுண்ட் கலப்பு வில்வித்தை பிரிவில் ஷீத்தல் தேவி மற்றும் டோமன் குமார் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

3. மகளிர் W1 பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்வாதி சௌத்ரி. வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Para Asian games
Para Asian games ESPN

பாரா பேட்மிண்டன் - வெள்ளி 1 , வெண்கலம் 6

1. ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் சுஹாஸ் யதிராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2. ஆடவர் SL4 ஒற்றையர் பிரிவில் அபிஜீத் சகுஜா வெண்கலம் வென்றார்.

3 . மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில் மனிஷா ராமதாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

4. மகளிர் ஒற்றையர் SL3 பிரிவில் சஞ்சனா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

5. SH6 கலப்பு இரட்டையர் பிரிவில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

6.ஆடவர் இரட்டையர் பிரிவில் சூர்ய காந்த் யாதவ் மற்றும் நவீன் சிவகுமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

7. கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் மனிஷா ராம்தாஸ் மற்றும் பிரமோத் பகத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பாரா நீச்சல் - வெள்ளி 1 , வெண்கலம் 2

1. ஆடவர் 400மீ ஃப்ரீஸ்டைல் ​​எஸ்10 பிரிவில் கபில் குமார்,

வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2. ஆண்களுக்கான 100 மீட்டர் மார்பு நீச்சல் SB9 பிரிவில் சஸ்வாதிக் பாட்டீல், வெண்கலப் பதக்கம் வென்றார்.

3. ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் S7 இறுதிப் போட்டியில், தேஜஸ் நந்தகுமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாரா டேபிள் டென்னிஸ்- வெண்கலம் 1

XD7 பிரிவு கலப்பு இரட்டையர் பிரிவின் பவினா படேல் மற்றும் ஷுபம் வத்வா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

logo
Kalki Online
kalkionline.com