

2026 ஆம் ஆண்டிற்கான ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் , தற்போது பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த முறை ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 109 வெள்ளி , வெண்கலம் உள்ளிட்ட பதங்கங்களை வென்றது. இதில் 27 தங்கப் பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அப்போது அனுப்பிய விளையாட்டு குழுவில் 309 பேர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் தேர்வு சர்ச்சைகளினால் பல போட்டிகள் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியா 168 வீரர்களை மட்டுமே பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி உள்ளது. இந்தக் குழுவில் நிறைய பாரா ஒலிம்பிக் பதக்கங்களை பெற்ற வீரர்கள் இருப்பதினால், இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளது.
இன்றைய நாள் கணக்கின் படி இந்தியா பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் ,
தங்கம் -3
வெள்ளி -5
வெண்கலம் - 11 ஆகியவற்றை பெற்றுள்ளது.
1.பாரா டேபிள் டென்னிஸ் - 5 வெண்கலம்
மகளிர் ஒற்றையர் பல்வேறு பிரிவுகளில் விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் பாவினா படேல் , சோனல்பேன் படேல் , பிராச்சி பாண்டே, சஹானா ரவி ஆகியோர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி வெண்கலம் வென்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெஹான் மதன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அரையிறுதிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர்கள் தங்கள் போட்டிகளில் பின்தங்கியதால் வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பினார்.
2 .பாரா தடகளம் - 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்
i.ஈட்டி எறிதல் F53/F54 பிரிவில் பிரதிப் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார் , F53 ஈட்டி எறிதல் பிரிவில் ஆயுஷ் வர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ii. 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்றார்.
iii. ஆடவர் வட்டி எரிதல் பிரிவுகளில் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார் , ராம் ரத்தன் சிங் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
iv. 200 மீ ஓட்டப்பந்தயத்தில் பிரீத்தி பால் வெள்ளி பதக்கம் வென்றார். T 12 ஓட்டப் பந்தயத்தில் சிம்ரன் தங்கம் வென்றார். தேஜல்பன் டாமோர் வெண்கலம் வென்றன.
v. ஆண்களுக்கான F11 குண்டு எறிதல் போட்டியில் பிரவீன் ஷர்மா வெண்கலம் வென்றார்.
3.பாரா ஷூட்டிங் விளையாட்டு - 1 வெள்ளி, 1 வெண்கலம்
i.ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இறுதிப் போட்டியில் 233.7 புள்ளிகள் பெற்று மணீஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ii. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில், ஸ்ரிஷ்டி அரோரா 214.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
4.பாரா எடை தூக்குதல் - 1 வெள்ளி
6. பாரா நீச்சல் - 2 வெண்கலம்:
ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் S11 நீச்சல் பிரிவில் இறுதிப் போட்டியில் ஹிமான்ஷு நந்தல், இரண்டாவது வெண்கல பதக்கம் வென்றார். ஆடவர் 200மீ தனிநபர் மெட்லி எஸ்7 இறுதிப் போட்டியில் நிரஞ்சன் முகுந்தன் 2:57.01 நேரத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், பாரா நீச்சலில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்தது.
இந்திய குழு, ஆசியன் பாரா போட்டிகளில் இரு நாட்களில் மொத்தமாக 34 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 9 தங்கம் , 11 வெள்ளி , 14 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும்.