Aryna Sabalenka.
Aryna Sabalenka.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகிறார் அரினா சபலென்கா!

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, சமீபத்தில் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் இறுதிப்போட்டியில் எலனா ரிபாகினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த போதிலும் ஆஸ்திரேலிய ஒபன் 2024 போட்டிக்கு தயாராகி வருகிறார். தொழில் முறையில் இவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான சப்லென்கா, 2023 யு.ஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி போட்டிவரை வந்து, பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் இறுதிக் கட்டம் வரை சென்று சிறப்பாக விளையாடினார்.

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் இறுதிச் சுற்றில் சப்லென்கா, எலனா ரிபாகினாவிடம் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சப்லென்கா, 2023 ஆம் ஆண்டு எனக்கு நம்பமுடியாத சிறப்பான ஆண்டாக இருந்தது. ஒருவீர்ர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் எனது முன்னேற்றம் இருந்தது. அந்த ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு முன்னதாக எனக்கு ஒரு நல்ல சீசன் இருப்பதாகவே உணர்ந்தேன் என்கிறார்.

கடந்த ஆண்டு எதிர்பாராத முன்னேற்றம் என் வாழ்விலும், டென்னிஸ் போட்டியிலும் இருந்த்து. நான் கடுமையாக உழைத்தேன். அதற்கு ஏற்றவாறு முன்னேறமும் இருந்தது. நான் இப்போது எதையும் சந்திக்க தயாராக இருபது போல் உணர்கிறேன்.

இதையும் படியுங்கள்:
கணுப் பொங்கலும் காணும் பொங்கலும் - தாத்பர்யங்கள் என்ன?
 Aryna Sabalenka.

பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் இறுதிப் போட்டியில், தம்மைவிட எலனா ரிபாகினா சிறப்பாக விளையாடியதாக சப்லென்கா கூறினார். நான் ஓரளவு சிறப்பாக விளையாடினேன் என்றாலும் என்னைவிட ரிபகெனா அதிரடி ஆட்டம் ஆடி தோற்கடித்துவிட்டார்.

பிரிஸ்பேன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் நன்றாகவே விளையாடினேன். நன்றாகவே பயிற்சி பெற்றேன். அவை எனக்கு சாதகமாக அமைந்தன. இறுதிப் போட்டிதான் சரியாக அமையவில்லை என்றார் சபலென்கா.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முதலில் எல்லா சீடலை எதிர்கொள்கிறார். அடுத்து அநேகமாக காலிறுதியில் அவர் ஓன்ஸ் ஜபூரை சந்திப்பார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com