Bill Ponchford & Don Bradman
Bill Ponchford & Don BradmanImg Credit: Wisden

AUS vs ENG: ஒரே டூரில் அடுத்தடுத்து இரண்டு அசத்தல் பார்ட்னர்ஷிப்புகள்..!

கிரிக்கெட் ஒரு டீம் கேம். ஒரு வீரர் சாதனை புரிய மற்ற வீரர், வீரர்களின் சப்போர்ட் மிகவும் அவசியம்.

பல வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி இருந்தாலும் இரண்டு வீரர்கள் ஜோடி சேர்ந்து (partnership) எதிரணியினரைத் திணற அடித்த சம்பவங்களின் சில ‘பெஸ்ட்’ பார்ட்னர்ஷிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம்:

Australian Tour of England - July 1934 - 4th Test Match Leeds - Partnership 388 runs

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆல் அவுட் 200 ரன்கள்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்கம் போற்றும்படி இல்லை. ஸ்கோர் 39/3 என்ற நிலைமையில் ஒப்பனிங் பேட்ஸ்மன் பில் போன்ச்போர்ட் உடன் ஜோடி சேர்ந்தார், டான் ப்ராட்மன். அப்பொழுது ஆரம்பித்தது மகத்தான பார்ட்னர்ஷிப்பின் ஆதிக்கம். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பவுலர்களின் பந்துக்களை மைதானத்தின் நாலாபுறமும் விளாசினர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 22 ரன்களுடன் ஆடிக்கொண்டு இருந்த பில் போன்ச்போர்ட், அடுத்த நாள் முழுவதும் ஆடி, மொத்தம் 19 பவுண்டரிகள் அடித்தார். அவர் வெரிட்டி பவுலிங்கில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார். அவர் எதிர்கொண்ட பந்துக்கள் 413. எடுத்த ரன்கள் 181.

போன்ச்போர்ட், டான் ப்ராட்மன் ஜோடி சேர்ந்து இந்த டெஸ்டில்,நான்காவது விக்கெட்டிற்காக எடுத்த ரன்கள் 388. புதிய ரிக்கார்ட் ஏற்படுத்தினார்கள்.

போன்ச்போர்ட் விக்கெட் விழுந்தபொழுது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 427 – 4. அன்றைய ஆட்ட முடிவில் ப்ராட்மன் 271*.மூன்றாம் நாள் ஆட்டத்தில் போவ்ஸ் பந்தில் ப்ராட்மன் அவுட். எதிர்கொண்ட பந்துக்கள் 473. எடுத்த ரன்கள் 304.மூன்று சதங்களில் 43 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள். ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 584 ஆக உயர்ந்துள்ளது.இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்229 – 6. டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

Bill Ponchford & Don Bradman
Bill Ponchford & Don BradmanImg Credit: ESPNcricinfo

Same tour of Australia in England - August 1934 - 5th Test match @ The Oval - Partnership 451 runs by the same pair.

அதே சுற்றுப்பயணம். அதே ஜோடி. மறுபடியும் இந்த ஜோடியின் அசத்தல் பார்ட்னர்ஷிப். இந்த முறை அந்த ஸ்கோரை முறியடித்து புதிய ரிக்கார்ட்.

இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 701.

முதல் விக்கெட் விழுந்ததும், டான் ப்ராட்மன், பில் போன்ச்போர்ட் உடன் ஜோடி சேர்ந்து ஆடத் துவங்கினார்.

இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு இங்கிலாந்து அணி பவுலர்கள்பந்துக்களை பதம் பார்த்தனர். இருவரின் ஆட்டத்தில், ப்ராட்மன் வெகு வேகமாக ஆடினார். இருவரும் இரட்டை சதங்கள் எடுத்தனர்.271 பந்துக்கள் எதிர்கொண்ட ப்ராட்மன் போவ்ஸ் பந்தில், ஆம்ஸ் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். ஒரு சிக்ஸர், 32 பவுண்டரிகள் அடித்தார் ப்ராட்மன். எடுத்த ரன்கள் 244.

இதையும் படியுங்கள்:
IPL 2024: 14 வருட மகுடத்தை இறக்கி வைத்தார் தோனி... CSK-வின் 'குட் பேட் அக்லி' அறிவிப்புகள்!
Bill Ponchford & Don Bradman

இவர் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 472ல் அவுட் ஆனார். எனவே, இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 451 ரன்கள் குவித்து மற்றும் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்தினர்.

அந்த நாள் ஆட்ட முடிவில் போன்ச்போர்ட் ரன்கள் 205*. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இவர் 422 பந்துக்கள் எதிர்கொண்டு ஆலன் போட்ட பந்தில் அவுட் ஆனார்.

போன மேட்ச் மாதிரி இந்த மேட்சிலும் இவர் அவுட் ஆனது ஹிட் விக்கெட் முறைப்படி. 27 பவுண்டரிகள் எடுத்த இவரது ஸ்கோர் 266.

போன்ச்போர்ட், ப்ராட்மன் சதங்கள் தவிர இங்கிலாந்து வீரர் மௌரைஸ் லேயலாந்து என்பவர் எடுத்த ரன்கள் 110.

ஆஸ்திரேலிய அணி, ஆகஸ்ட் 1934ல் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற இந்த டெஸ்டை வென்றது.

பில் போன்ச்போர்ட், டான் ப்ராட்மன் ஜோடிகளின் இந்த இரண்டு புகழ் மிக்க பார்ட்னர்ஷிப்புக்களும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அழியா இடம் பெற்றவை ஆகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com