IPL 2024: 14 வருட மகுடத்தை இறக்கி வைத்தார் தோனி... CSK-வின் 'குட் பேட் அக்லி' அறிவிப்புகள்!

Dhoni
Dhoni

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் ஒருவழியாக நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் சிஎஸ்கே இரண்டு அறிவிப்புகளை அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகம் கலந்தப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. அதுவும் முதல் போட்டியே சென்னையில் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடைபெறுகிறது. ரசிகர்களின் குஷியும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே செல்கிறது. விராட் கோலி இரண்டு மாதங்களுக்குப் பிறகு மைதானத்தில் களமிறங்கவுள்ளார்.

இந்தநிலையில் இது தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்று சிலர் கூறிவந்த நிலையில் தற்போது அது அதிகாரப்பூர்வமானது. சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் என்ற அறிவிப்பை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் 14 ஆண்டுகள் கேப்டன்ஸி என்ற மகுடத்தைத் தற்போது ருத்துராஜுவிற்கு அணிவித்திருக்கிறார், தோனி. இதனால் ரசிகர்கள் ஒருபக்கம் பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாகவே தோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புது ரோலில் இறங்கவுள்ளதாகப் பதிவிட்டிருந்தார். ஆனால் அவர் பயிற்சியில் இறங்கியதால் அந்தப் பதிவை அனைவருமே மறந்துவிட்டனர். தற்போது வந்த இந்தச் செய்தியால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே ஓய்வறிப்பை விடவுள்ளார் என்பதுத் தெரியவந்துள்ளது. மேலும் அவர் அணியின் ஆலோசகராகச் செயல்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் ரசிகர்கள் தோனிக்கு Take a Bow, thank you our captain, போன்ற வார்த்தைகளால் 5 முறை கோப்பையை வென்ற தோனிக்கு விடைக்கொடுத்து வருகின்றனர்.

மும்பை அணியில் ரோஹித் கேப்டன்ஸியிலிருந்து விலகினார். தற்போது தோனி . ஒரே ஆண்டின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு ஷாக்குகளைக் கொடுத்து ரசிகர்களை உற்சாகமிழக்க வைத்துவிட்டனர்.

Dhoni and Ruthu
Dhoni and Ruthu

மறுபுறம் பெங்களூர் சென்னை அணிகளின் மோதலைப் பார்க்க ஆன்லைனில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனையாகிவிட்டது. சென்னை அன்பைக் கண்ட சிஎஸ்கே அணி நிர்வாகம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதாவது சேப்பாக்கத்திற்குப் பேருந்தில் வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பயணம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி நடத்துனரிடம் நீங்கள் ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டைக் காண்பித்தால் மட்டும் போதும் இலவசமாகவே பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கானக் கட்டணத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் அரசுக்கு வழங்கிவிட்டது. இதன்மூலம் போட்டி நடைபெறுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்தவுடன் 3 மணி நேரத்திற்குப் பின்பும் இந்தச் சலுகை அமலில் இருக்கும். இதேபோல் ஏற்கனவே மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள, சென்ற ஆண்டு வசதி செய்யப்பட்டது இதனையடுத்து தற்போது பேருந்துகளுக்கும் இந்த வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
“எனக்கு அவர் குணம் பிடிக்கும்” - கவுதம் கம்பீரைப் பாராட்டிய அஸ்வின்!
Dhoni

இந்தச் சலுகை கொண்டு வந்ததன் முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால்தான். அதேபோல் சொந்த வாகனங்களில் வருபவர்கள் அவர்களது வாகங்களை நிறுத்தினால் சேப்பாக்கம் மட்டுமல்ல அண்ணாசாலை முழுவதும் வாகனம் நிறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த சலுகைக் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதலில் தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் என்றே கருதப்பட்டது. அதன்பின்னர் தான் இது சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்த ஏற்பாடு என்பது தெரியவந்தது. சென்னை அணி நிர்வாகத்தின் இந்த இன்ப அதிர்ச்சி அறிவிப்பு, மைதானத்திற்குச் சென்று போட்டியைப் பார்க்க செல்பவர்களுக்கு குஷியான அறிவிப்பாகும்.

இருந்தாலும் தோனியின் ஆட்டத்தைப் பார்க்கவே ஆன்லைன் டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் இது ஒரு பெரிய ஏமாற்றம்தான். குட் நியூஸ் மற்றும் பேட் நியூஸான இந்த அறிவிப்புகள் ரசிகர்களுக்கு 'குட் பேட் அக்லி' நியூஸ்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com