இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டெல்லி அணியின் கேப்டன் யாரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் கோலாகலமாக துவங்கப்போகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, மீதி வீரர்களை வெளியேற்றினார்கள்.
பின் ஏலத்தில் தனக்கு தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கிக்கொண்டது.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி கேப்டனை அறிவித்துவிட்டது. நீண்ட காலமாக இழுத்து வந்த டெல்லி அணியும் தற்போது அணி கேப்டனை அறிவித்துவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் இல்லை.
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பண்டிதர், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான். இந்த அணிகளின் கேப்டன்கள் இம்முறை மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கு யார் சரிவருவார்கள் என்று குழப்பத்தில் இருந்தனர். இந்த பட்டியலில் மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர். அதாவது, கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் மூன்று பேரும் இடம்பெற்றிருந்தனர்.
அணி நிர்வாகம் கே.எல்.ராகுலை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார் என்பதும் தெரியவந்தது.
இப்படியான நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக அக்ஷர் படேலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இவர் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அவர், ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார்.
மொத்தம் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
சென்ற ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.