பை = 3.14 = 22/7 - பகுத்தறிய முடியாத எண்!

மார்ச் 14: பை நாள் கொண்டாட்டம்!
Pi day
Pi day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பை எனும் அளவு π எனும் கிரேக்க எழுத்து மூலம் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் நன்கு அறியப்பட்ட கணித மாறிலிகளில் ஒன்றாகும். இது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கு அதன் விட்டத்தின் விகிதமாகும். எந்த வட்டத்திற்கும், விளிம்பைச் சுற்றியுள்ள தூரம் குறுக்கே உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

ஒரு கால்குலேட்டரில் π ஐத் தட்டச்சு செய்து ENTER ஐ அழுத்தினால் 3.141592654 என்ற முடிவு கிடைக்கும், இந்த மதிப்பு துல்லியமானது அல்ல. ஆனால், ஒரு கால்குலேட்டரின் காட்சி பெரும்பாலும் 10 இலக்கங்களை மட்டுமேக் கொண்டிருக்கும் என்பதால், பை என்பது உண்மையில் ஒரு பகுத்தறிய முடியாத எண் (முடிவு இல்லாத தசமம் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் முறை) இது பெரும்பாலும் 3.14 எனும் தசம எண்னில் அல்லது 22/7 எனும் பின்னத்துடன் தோராயமாக மதிப்பிடப்படுகிறது.

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ் பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். பை அண்ணளவு நாளைப் பல்வேறு நாட்களில் கொண்டாடுகின்றனர்.

அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஆம் நாளைக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π ஐயும் குறிக்கும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14 ஆம் நாள் பை நாளாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, கால்குலேட்டரில் π ஐத் தட்டச்சு செய்து ENTER ஐ அழுத்தினால் கிடைக்கும் 3.141592654 என்ற எண்ணுக்கேற்ப, மார்ச் 14 ஆம் நாளில், 1:59:26 என்கிற குறிப்பிட்ட நேரத்தில் கொண்டாடப்படுகிறது.

π என்பதன் பரவலாக அறிந்த அண்ணளவு 22/7 எனும் பின்னமாகவும் கொள்ளப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை மாதம் 22 ஆம் நாளிலும் பை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த இரு நாட்களைத் தவிர, கிரிகோரியன் நாட்காட்டியின்படி, ஆண்டு தொடக்க நாளில் இருந்து, பூமி தனது சுற்றில் 1 ரேடியன் அளவு சுற்றி வரும் நாள் எனும் கணக்கில் பிப்ரவரி 27 ஆம் நாளிலும், ஒரு ஆண்டின் 314 வது நாள் எனும் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் நாளில், நெட்டாண்டாக இருப்பின் நவம்பர் 9 ஆம் நாளிலும் பை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே போன்று பையின் சீன அண்ணளவான 355/113 எனும் அடிப்படையில் சீனாவில் ஆண்டின் 355 ஆம் நாளான டிசம்பர் 21 அன்று பிற்பகல் 1.13 மணிக்கு பை நாள் கொண்டாடப்படுகிறது.

வெளிநாடுகளில், பை கொண்டாட்ட நாளில், பை நாளில் கேக்குகளில் π எனும் குறியீட்டை இட்டு சிறு குழந்தைகளுக்குத் தந்து π குறித்து விளக்கமளிக்கின்றனர் . Pineapple, Pinenuts, Pizza என்று பை என்று தொடங்கும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, π குறித்து நினைவூட்டுகின்றனர். இதே போன்று, விளையாட்டில் ஆர்வமுடைய குழந்தைகளுக்கு 3.14 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும் அவர்களுக்கு π மதிப்பை நினைவூட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தூக்கத்தை ஏழு மணி நேரம் வரை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
Pi day
logo
Kalki Online
kalkionline.com