பதவி விலகிய பாபர் அசாம்… காரணம் இதுதானா?

Babar azam
Babar azam
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்ஸி பதவியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.

பாபர் அசாம் இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 26 போட்டிகளில் வெற்றிபெற்றும், 15 போட்டிகளிலும் தோல்வியையும் சந்தித்துள்ளார். அதேபோல் 85 டி20 போட்டிகளில் 48 வெற்றி, 29 தோல்வியுடன் உள்ளார். சொந்த மண்ணில் வழிநடத்திய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார்.

சென்ற வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால், கேப்டன்மீது எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. ஆகையால் பாபர் அசாம் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் ஷாகின் அப்ரிடி நியமனம் செய்யப்பட்ட நிலையில், திடீரென்று டி20 உலகக்கோப்பையின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடியதால், பாபர் கேப்டன்ஸிதான் காரணம் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். அப்போது பாபர் அசாம் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினர். ஆகையால் அடுத்த கேப்டனுக்கான ரேஸில், முகமது ரிஸ்வான் முதல்முறையாக முன்னிலைக்கு வந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட உள்நாட்டு சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை தொடரில், எந்த அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

இருந்தாலும் அணியில் சாதாரண வீரராக விளையாடிய பாபர் அசாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு சதம் உட்பட 230 ரன்களை விளாசினார். இதனால், அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கணித்தனர். அந்தவகையில் தற்போடு பாபர் அசாம் கேப்டன்ஸி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபர் அசாம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதுகுறித்து கடந்த மாதமே, பிசிபி நிர்வாகத்திற்கும், அணி நிர்வாகத்திற்கும் கூறிவிட்டேன். இந்த அணியை வழிநடத்தியது பெருமையளிக்கும் விஷயம். ஆனால் இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் சூழலில் உள்ளேன். கேப்டனாக இருக்கும் போது வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கான்பூர் மைதானம்தான் மிக மோசமான மைதானம் – ரசிகர்கள் கருத்தால் பிசிசிஐ துணை தலைவர் காட்டம்!
Babar azam

அதனால் இனி பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதேபோல் எனது ரோலில் தெளிவு கிடைக்கும் என்பதோடு, சொந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவுள்ளேன். இதுவரை இணைந்து செய்த சாதனைகளை நினைத்து பெருமைக் கொள்கிறேன். இனி வீரராக பயணிக்க ஆவலாக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

இதனால் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com