கான்பூர் மைதானம்தான் மிக மோசமான மைதானம் – ரசிகர்கள் கருத்தால் பிசிசிஐ துணை தலைவர் காட்டம்!

Green Park Stadium
Green Park Stadium
Published on

மழை பெய்ததால் கான்பூர் மைதானத்தில் நடந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து கான்பூர் மைதானமே மிக மோசமான மைதானம் என்று ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பிசிசிஐ துணை தலைவர் பதிலளித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதன் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டி முதல் மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்றாவது நாள் மழை இல்லையென்றாலும், முதல் இரண்டு நாட்கள் பெய்த மழையால், மைதானத்தில் நீர்த் தேங்கியது. ஆகையால் போட்டி நடத்தப்படவில்லை. இந்த மூன்று நாட்களில் மொத்தம் 32 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

இதனால் இது மிகவும் மோசமான மைதானம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.  இதனையடுத்து இதற்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தக்க பதில் கொடுத்திருக்கிறார், “நாங்கள் பல விமர்சனங்களைக் கேட்டு பழகிவிட்டோம். ஆனால், அனைத்திற்கும் விமர்சனம் செய்வது சரியல்ல. கான்பூர் மைதானத்தில் வேறு சில காரணங்களால் போட்டி நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்தோம், அதற்கும் விமர்சித்தீர்கள். இப்போது போட்டியை நடத்தியும் விமர்சிக்கிறீர்கள். இதற்கு முடிவே இல்லையா?

இதையும் படியுங்கள்:
Ind Vs Ban: விராட்டுக்கு முன் ரிஷப் பண்டை அனுப்பிய கம்பீர்… அதிரடியாக விளையாடிய கோலி!
Green Park Stadium

இந்த மைதானம் 80 வருடங்கள் பழமையான பாரம்பரியமான மைதானமாகும். அதுதான் பிரச்னை. அப்போது வழக்கமாக இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்தியாவின் 6 பிரபல மைதானங்களில் ஒன்றாக இது இருந்தது. ஆகையால், இங்கு டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் என்பதே எங்களது எண்ணம். இந்த மைதானத்தில் 80 ஆண்டுகளாக எந்தவித இடையூறும் ஏற்பட்டு இதுபோல் போட்டி தடைப்பட்டதே இல்லை. இதுவே முதல்முறை. உலகின் பல்வேறு இடங்களில் போட்டி மழையால் தடைப்பட்டன. ஆகையால், வெறும் இரண்டு நாட்கள் போட்டி ரத்தானதற்கு அனைவரும் பொங்கி எழத் தேவையில்லை.” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com