

சில நேரங்கள்ல பிரண்ட்ஸ்ஸோடு பேட்மிண்டன் விளையாடும்போது, கையில இருக்குற அந்த சின்ன ‘ஷட்டில் காக்க’ உத்துப் பார்ப்பேன். "ஒரு சின்ன கார்க் கட்டை, அதுல கொஞ்சம் இறகுகள்... இது எப்படி இவ்வளவு வேகமா பறந்து போய் கரெக்டா கோர்ட்டுக்குள்ள விழுது?" அப்படின்னு யோசிச்சதுண்டு.
நம்மள்ல பல பேர் தினமும் சாயங்காலம் பேட்மிண்டன் விளையாடுவோம், ஆனா நாம அடிக்கிற அந்த ஷட்டில் காக்குக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்குன்னு நமக்குத் தெரியாது. பேட்மிண்டன் உலகக் சங்கத்தோட (BWF - Badminton World Federation) ரூல்ஸ்படி, ஒரு ஒரிஜினல் ‘இறகு’ (Feather) ஷட்டில் காக்ல சரியா 16 இறகுகள் இருக்கணும். அதோட மொத்த எடை 4.74 கிராம்ல இருந்து 5.50 கிராம் வரை மட்டும்தான் இருக்கணும்.
சரி, ஏன் 15 இல்லாம, 17 இல்லாம சரியா 16 இறகுகள் வச்சிருக்காங்க?:
பல வருஷமா நடத்துன டெஸ்ட்ல, 16 இறகுகள் இருந்தாதான் காத்துல ஷட்டில் காக் ஆடாம நேராப் பறக்கும்னு கண்டுபிடிச்சாங்க. ஏன்னா, இறகு கம்மியானா காத்துல காக் (Cock) தள்ளாடும்; அதுவே அதிகமா இருந்தா காத்து ரொம்பத் தடுத்து வேகம் குறைஞ்சுடும்.
அதுமட்டுமில்ல, நாம எந்தப் பக்கம் திருப்பி அடிச்சாலும், இந்த 16 இறகுகளோட டிசைன் காத்துல சுழன்று, தானாவே சரி செய்து கார்க் பகுதியை முன்னாடி கொண்டு வந்துடும். இதனாலதான் பெரிய இன்டர்நேஷனல் மேட்ச்ல எவ்வளவு வேகமா அடிச்சாலும் ஷட்டில் காக் கரெக்டா கோர்ட்டுக்குள்ள போய் விழுது.
இன்டர்நேஷனல் மற்றும் பெரிய பெரிய மேட்சுகள்ல பிளேயர்ஸ் பயன்படுத்துற ஷட்டில் காக்குகள வாத்து அல்லது அன்னப் பறவையோட லெப்ட் சைடு இறக்கையில இருந்து எடுக்குற இறகுகள்ல இருந்து மட்டும்தான் செய்றாங்க.
ஏன்னா, ஒரே சைடுல இருக்க இறகுகள் இருந்தாதான் காத்துல ஒரே மாதிரி காக் நேர போகும். சோ, அதுக்கு எல்லா இறகும் ஒரே வளைவோட, ஒரே நீளத்துல (62 முதல் 70 மிமீ) இருக்கணும்.
சின்ன வித்தியாசம் இருந்தா கூட பறக்குற திசை மாறிடும். கடைசியா இந்த இறகுகள மெல்லிசா தோல் கவர் பண்ண உருண்டையான ‘கார்க்’ கட்டையில கவனமா சொருகி; நூல், அப்புறம் பசை வச்சு ரொம்ப ஸ்ட்ராங்கா ஒட்டுவாங்க.
இதுல பல பேருக்கு தெரியாத சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, பிளேயர்ஸ் ஷட்டில் காக்கோட அளவை மட்டும் வச்சு அதைத் தேர்ந்தெடுக்க மாட்டாங்க. மேட்ச் நடக்குற இடத்துல ‘மைதானத்தோட எண்ட்(கடைசி) லைன்ல நின்னு ஒரு குறிப்பிட்ட வேகத்துல ஷட்டிலை அடிச்சு, அது எதிர் கோர்ட்டோட குறிப்பிட்ட எல்லைக்குள்ள (530 முதல் 990 மிமீ உள்ளே) விழுகுதான்னு 'ஸ்பீட் டெஸ்ட்' (Speed Test) பண்ணிப் பார்ப்பாங்க.
இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, வெறும் 5 கிராம் எடை கொண்ட இந்த ஷட்டில் காக், ரேஸ் கார்களைவிட வேகமா மணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஸ்பீடுல பறக்கும். ஆனா இந்த 16 இறகுகள், சுத்தி இருக்க காத்த அதிகமா தடுக்குறதால, அடுத்த சில செகண்ட்லையே வேகம் டக்குனு குறைஞ்சு மெதுவா கீழே இறங்கும். இதுதான் பேட்மிண்டன் விளையாட்டை மத்த விளையாட்டுகள்ல இருந்து வித்தியாசப்படுத்துது.
‘பேட்மிண்டன் உலகக் சங்கத்தோட (BWF) விதிமுறைகள் மற்றும் விளையாட்டு சயின்ஸ் ஆய்வுகள்’ இதை உறுதிப்படுத்துது. அடுத்த தடவ உங்க ஏரியா பசங்களோட பேட்மிண்டன் விளையாடும்போது, கையில இருக்குற அந்த 16 இறகுகளுக்குப் பின்னாடி இருக்குற இந்த விஷயங்களையும் ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க!.