New Zealand vs Bangladesh
New Zealand vs Bangladesh

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி!

பங்களாதேஷ் அணி வரலாற்றிலெயே முதன்முறையாக நியூசிலாந்து அணியை அதனுடைய சொந்த மண்ணில் தோல்வியடைய செய்தது, உலக கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பங்களாதேஷ் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் கலந்துக்கொண்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணியே வெற்றிபெற்றது. பங்களாதேஷ் அணி தீவிரமாக போராடியும் வெற்றிபெறமுடியவில்லை.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியின் சொந்த மண்ணில் 98 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது பங்களாதேஷ் அணி. சொந்த மண்ணில் இப்படி ஒரு தோல்வியை கொடுத்த பங்களாதேஷ் அணி உலக கிரிக்கெட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதான் பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது வரலாற்றிலேயே முதன்முறையாகும்.

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பங்களாதேஷ் அணி பிட்சை சரியாக கண்கானித்து சிறப்பாக பந்துவீசியது. பங்களாதேஷின் அட்டகாசமான பந்துவீச்சு நியூசிலாந்து அணியை திக்குமுக்காடச் செய்தது. வில் யங் 26 ரன்களும் டாம் லாதம் 21 ரன்களும் தான் நியூசிலாந்து அணியின் அதிகப்பட்ச ரன்கள். நியூசிலாந்து அணி 31.4 ஓவரில் ஆல் அவுட் ஆனது.

பங்களாதேஷ் அணியில் தன்சிம் ஹசன் , ஷோரிபுல் இஸ்லாம், சவும்யா சர்க்கார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். முஸ்தாபிசூர் ரஹ்மான் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
CSK ஓய்வுக்குப்பின் ராணுவத்தில் நேரத்தை செலவிட எம்.எஸ்.தோனி திட்டம்!
New Zealand vs Bangladesh

அடுத்து பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்தது. சவும்யா சர்க்கார் 4 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அனாமுல் ஹக் 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் நஜ்முல் ஹசன் ஆட்டம் முடியும் வரை நின்று 51 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமானார். பங்களாதேஷ் அணி 15.1 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றியை பெற்றது.

பங்களாதேஷ் அணியின் முதல் வெற்றியே மிக மிக சுவாரசியமாகவும் இதுவரை தோல்வியால் ஏற்பட்ட வெறியை ஒட்டுமொத்தமாக காட்டி எதிரணியை திணரடிக்கவும் செய்தது. மேலும் பங்களாதேஷ் அணியில் மூத்த வீரர்கள் இல்லாமலே இந்த சிறப்பான வெற்றியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com