MS Dhoni.
MS Dhoni.

CSK ஓய்வுக்குப்பின் ராணுவத்தில் நேரத்தை செலவிட எம்.எஸ்.தோனி திட்டம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் ராணுவத்தில் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம ஆண்டே சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்தார். ஆனாலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமையேற்று விளையாட இருக்கும் தோனி, அத்துடன் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமையேற்ற எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2023 ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 8 கிரிக்கெட் வீர்ர்கள் 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனுக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர டாரி மிட்சல் (ரூ.14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ.8.4 கோடி), ஷர்துல் தாகுர் (ரூ.4 கோடி), ராச்சின் ரவீந்திரா (ரூ.1.8 கோடி), முஸ்டாபிஸுர் ரஹ்மான் (ரூ.2 கோடிக்கும்) எலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அவினாஷ் ராவ் ஆரவல்லி ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் குஜராத் டைடன்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய எம்.எஸ்.தோனி, அடுத்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

"நான் ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என நினைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் என்ன செய்வது என்று யோசித்து பார்த்தேன். அப்போது ராணுவத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் வந்த்து. எனவே ஓய்வுக்குப் பின் ராணுவத்துடன் நேரத்தை செலவிட தீர்மானித்துள்ளேன்" என்று எம்.எஸ்.தோனி கூறினார்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கேப்டன் யார்? தோனி சொன்ன ’நச்’ பதில்
MS Dhoni.

2022 ஐ.பி.எல். போட்டிகளின் போது எம்.எஸ்.தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் நியமித்தது. ஆனால், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த சீசனில் வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. இதையடுத்து 2023 ஐ.பி.எல். சீசனில் மீண்டும் எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com