ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கிறதா பிசிசிஐ?

Shreyas Iyer and Ishan Kishan
Shreyas Iyer and Ishan Kishan

இந்திய வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்து கடந்த மார்ச் மாதம் நீக்கியது. இதனால் இருவரும் இனி இந்திய அணியில் விளையாட மாட்டார்கள் என ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது மீண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

பொதுவாக வீரர்கள் தொடர்ந்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் பிசிசிஐ டீமெரிட் பாய்ன்ட் கணக்கு வைத்து, ஒரு ஆண்டுக் காலம் அல்லது போட்டிகள் கணக்கு வைத்து அணியிலிருந்து நீக்கும். அதேபோல் பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்தும் அவர்களை நீக்கும். அதாவது பிசிசிஐ ஒரு வருடத்திற்கு அந்த வீரர்களுக்கு எந்த சம்பளமும் வழங்காது. ஆனால் சம்பளம் இல்லாமல் வீரர்கள் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்.

அந்தவகையில், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதற்குக் காரணம் அவர்கள் இருவரையும் பிசிசிஐ ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டுமென்று கூறியும் விளையாடமல், ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்ததால்தான்.

பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தின் விதியில், ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் வீரர்கள் இல்லையென்றால், அவர்கள் இந்திய அணிக்காக விளையாடக்கூடாது என்ற எந்த விதியும் இல்லை. இதற்கு உதாரணம், ரிங்கு சிங், ரவி பிஸ்னாய், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சில காலங்களுக்கு முன்பு வரை பிசிசிஐயின் ஊதியம் இல்லாமல்தான் இந்திய அணியில் விளையாடி வந்தார்கள். சமீபத்தில்தான், அவர்கள் ஊதிய பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். 12 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் கிடையாது. பின் மீண்டும் ஊதிய பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஒருவேளை மீண்டும் மீண்டும் அவர்கள் பிசிசிஐயின் விதிகளை மதிக்கவில்லை என்றால், மீண்டும் தண்டனை அளிக்கப்படும்.

அந்தவகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் ஐயர், கிஷான் உள்ளிட்ட 30 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும், இவர்களை தேர்வுக் குழு கண்காணிக்கும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து ஜெய் ஷா கூறியது, “இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களையும் நீக்குவது தனது முடிவு அல்ல, ஆனால் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இந்த முடிவை எடுக்கமாறு என்னிடம் கூறினார்.”

தேசிய கிரிக்கெட் அகாடமியில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் பயிற்சி முகாம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த முகாமில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், மயங்க் யாதவ், முஷீர் கான், சாய் கிஷோர், பிருத்வி ஷா உள்ளிட்ட 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட இருக்கின்றனர். இந்த 30 வீரர்களில் பெரும்பாலானோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
"தோனியும் நானும் கடைசி முறை ஒன்றாக விளையாடப் போகிறோம்..." – விராட் கோலி!
Shreyas Iyer and Ishan Kishan

மேலும் பிசிசிஐ கூறியதாவது, “பிசிசிஐ அல்லது தேர்வுக் குழுவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை. அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் மனோபாவத்தை மேம்படுத்தி, மும்பை மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்காக விளையாடினால், அது சரியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது செயல்திறன் நன்றாக இருந்தால், அவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்குத் திரும்புவது முற்றிலும் சாத்தியமாகும். இதையடுத்தும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீதும் ஒரு கண் வைக்கப்படும்.”

நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலமையிலான கேகேஆர் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com