"தோனியும் நானும் கடைசி முறை ஒன்றாக விளையாடப் போகிறோம்..." – விராட் கோலி!

MS Dhoni And Virat Kohli
MS Dhoni And Virat Kohli

இன்று பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இதனையடுத்து விராட் கோலி, “தோனியும் நானும் கடைசி முறையாக விளையாடப் போகிறோம்.” என்று பேசியிருக்கிறார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது கிரிக்கெட் என்றால், அனைவருக்குமே தெரிந்த விரர்கள், விராட் கோலி, தோனி, ரோஹித், பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஜடேஜா போன்றோர். அதுவும் கேப்டன்கள் என்று கூறினால், தோனி, விராட், ரோஹித் ஷர்மா. ஆனால் இவர்கள் மூவருமே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்படவில்லை.

தோனி கடந்த ஆண்டு முதலே ஓய்வறிப்பை எப்போது வேண்டுமென்றாலும் விடலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. ஆகையால், கிரிக்கெட் ரசிகர்கள் விராட் , ரோஹித் ஆகியோர் இருக்கும் வரை கவலை இல்லை என்று ஆறுதல் அடையும் நேரத்தில், அடுக்கடுக்காக பல தகவல்கள் கசிய தொடங்கின. முதலில் தோனி இந்தாண்டுடன் ஓய்வுபெறுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது, ‘ரோஹித் விடைபெற்றார்’ என்றெல்லாம் இணையத்தில் பதிவிடப்படுகின்றன. மேலும் அவர் பேசும் வீடியோ ஒன்றும் வைரலானது. அதில் அவர் ‘இதுதான் கடைசி’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மூன்றாவதாக கோலி அதிகாரப்பூர்வமாகவே கூறிவிட்டார்.

"ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பது மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று இருக்கும். என்னால் இறுதிவரை விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்கவும் எனக்கு விருப்பமில்லை.

என் கிரிக்கெட் வாழ்வில் இதனைச் செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தப்படக் கூடாது. நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும். அதனால்தான் என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டி முனைப்போடு ஆடுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது. ஆனால், நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் என்னைக் காணவே முடியாது." என்று கூறினார்.இதனால், அவர் விரைவில் ஓய்வை அறிவிக்க திட்டமிட்டு விட்டார் என்றே கணிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!
MS Dhoni And Virat Kohli

அந்தவகையில் தற்போது இன்றைய போட்டி பற்றி பேசிய விராட் கோலி, "நானும், தோனியும் சேர்ந்து விளையாடும் கடைசிப் போட்டி இதுவாக இருக்கலாம். இந்தப் பெரிய போட்டியில் தோனியை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய தருணமாக இருக்கும். நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக பலமுறை கூட்டணியாக சேர்ந்து ரன் குவித்துள்ளோம். தோனி பல போட்டிகளில் கடைசி வரை நின்று வெற்றிபெற்றுக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். எனவே, ரசிகர்கள் எங்கள் இருவரையும் சேர்த்துப் பார்ப்பது முக்கிய தருணமாக இருக்கும்." என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com