பி.சி.சி.ஐ திட்டத்துக்கு ராகுல் டிராவிட் சம்மதிப்பாரா?

Rahul Dravid
Rahul Dravid

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகக் குழு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணி ஒப்பந்தத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது டிராவிட் வழிகாட்ட வேண்டும் என்றும் நிர்வாக குழு விரும்புகிறது.

தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் கீழ் விளையாடிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஒருநாள் சர்வதேச உலக கோப்பை போட்டியிலும் இரண்டாவது இடத்தை (ரன்னர்-அப்) பெற்றுள்ளது. டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்தால் இந்திய அணிக்கு நல்லது என்று பி.சி.சி.ஐ கருதுகிறது.

பி.சி.சி.ஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கடந்த வாரம் ராகுல் டிராவிடுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியதாகவும், அவரது பணி ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உடன் செல்ல வேண்டும் என்று பி.சி.சி.ஐ விரும்புவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஒருநாள் போட்டித் தொடரின் போது ராகுல் உடன் செல்லாவிட்டாலும், ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின்போது அவர் தென்னாப்பிரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைந்து கொள்ளக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
2023-இன் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல்!
Rahul Dravid

டி20 தொடருக்கு ராகுல் டிராவிட் செல்ல முடியாவிட்டால் அவருக்குபதிலாக வி.வி.எஸ்.லெட்சுமணன் பயிற்சியாளராக செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தேசிய கிரிக்கெட் அகாதெமி பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதால் அவரால் கூடுதல் பொறுப்பை சுமக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பினாலும் இது குறித்து ராகுல் டிராவிட் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் டிராவிடை தலைமைப் பயிற்சியாளராக, அதாவது அணியின் இயக்குநராக நியமிக்க ஐ.பி.எல். அணிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அவருக்கு ஒரு பெருந்தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ராகுல் டிராவிட் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com