கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன பென் ஸ்டோக்ஸ்: வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மிரட்டல் சம்பவங்கள்!

Cricket Retirement - பென் ஸ்டோக்ஸ்
Cricket Retirement - பென் ஸ்டோக்ஸ்
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ங்கிலாந்து கிரிக்கெட் உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்ததை அடுத்து, அவரின் கிரிக்கெட் பயணத்தில் நடந்த சுவராசிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இங்கிலாந்து அணி திணரும்போதெல்லாம் கடைசி நேரத்தில் போட்டியின் திசையை மாற்றி அணியை வெற்றிபெறச் செய்த இங்கிலாந்து அணியின் ஒரு ஹீரோ பென் ஸ்டோக்ஸ்.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சமமான ஆதிக்கத்தைச் செலுத்தி, தற்போது கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழும் இவர், இங்கிலாந்து அணிக்கு 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை வெற்றிகளைத் தேடித்தந்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டமுறையான பேஸ்பால் முறையை அறிமுகப்படுத்தி, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துயிர் அளித்த கேப்டனாக, கிரிக்கெட் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுவது 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகும். இங்கிலாந்து அணி, வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அந்தப் பதற்றமான சூழலில், பென் ஸ்டோக்ஸ் ஆடுகளத்தில் நின்றார். அப்போது நியூசிலாந்து பீல்டர் மார்ட்டின் கப்டில் வீச, அது ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு எதிர்பாராத விதமாக பவுண்டரி கோட்டைத் தாண்டியது. இதற்கு நடுவர்கள் Overthrow மூலம் 6 ரன்களை வழங்கினர். இது இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இதையும் படியுங்கள்:
ஒரு முறை பட்டும் திருந்தாத இந்திய அணி..! 11வது இடத்தில் இருக்கும் அயர்லாந்திடம் வீழ்ந்தது எப்படி?
Cricket Retirement - பென் ஸ்டோக்ஸ்

இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டோக்ஸ் தனது பேட்டை டைவ் செய்து க்ரீஸிற்குள் நுழைந்தபோது, பந்து தற்செயலாக பேட்டில் பட்டு சென்றதால், அந்த ரன்கள் இங்கிலாந்துக்குக் கிடைத்தன. இந்த சம்பவம் ஆட்டத்தை 'சூப்பர் ஓவர்' (Super Over) வரை கொண்டு சென்றது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்களை எடுக்க, 'அதிக பவுண்டரிகள் அடித்த அணி' என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்கு பிறகு, ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த Big Match Player என்று அனைவராலும் புகழப்பட்டார். 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

2019 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அதே ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய வீரதீர செயல் இன்றும் பேசப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் வெறும் 67 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற சூழலில் இருந்தது. ஒன்பதாவது விக்கெட் வீழ்ந்தபோது, இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 73 ரன்கள் தேவைப்பட்டன. ஜாக் லீச்சுடன் இணைந்து ஸ்டோக்ஸ் எடுத்த அந்த 135* ரன்கள், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Cricket Retirement - பென் ஸ்டோக்ஸ்
Cricket Retirement - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் ஜூன் 28, 2026 அன்று தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். அவர் ஓய்வை அறிவித்தபோது மைதானத்திலிருந்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியான சூழல்களில் ஒரு தனிநபர் எவ்வாறு ஒட்டுமொத்த அணியின் திசையையும் மாற்றி வெற்றியைத் தேடித்தர முடியும் என்ற உத்வேகத்தையும், பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத வரலாற்றுத் தருணங்களைப் பற்றிய முழுமையான புரிதலையும் நீங்கள் இதன் மூலம் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com