வெயிலுக்கு இதமான வெள்ளரி பழம்!

வெயிலுக்கு இதமான வெள்ளரி பழம்!

வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி பழம் . தற்போது வெள்ளரிபழங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.

வெள்ளரிப்பழம் குளிர்ச்சியை தரக்கூடியது மட்டுமல்ல மருத்துவ குணம் கொண்டதும் ஆகும். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.

திரினிப் பழம் (கிர்ணிப்பழம்) என்றழைக்கப்படும் ஒரு வகை பழத்தை, குண்டு வெள்ளரிப் பழம் எனவும் கூறுவர். வெள்ளரிப்பழத் தோல் மென்மையானது. திரினிப்பழத் தோல் தடிப்பானது. பழத்தின் சதைப் பகுதியை விதைகளை நீக்கிவிட்டு உண்பார்கள்.

வெள்ளரிப் பழத்தை சாப்பிட்டால் வெள்ளரிப் பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட, உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூசிக்கொண்டால் நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கோடையில் ஏற்படும் 'அக்கி, அம்மை' நோய் அண்டாது.

பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

உடல் சூட்டினால் கண் எரிச்சல், கன் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழம் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண்கள் பிரகாசிக்கும். ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 546, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.

'வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது' என தன்வந்திரி நிகண்டு காராவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெள்ளரிப்பழத்தின் விதைகளைத் தனியே சேகரித்து, காய வைத்து உடைத்து உள்ளே உள்ள பருப்புகளைச் சேகரித்து விற்பனைக்கு அனுப்புவார்கள். இந்தப் பருப்பு நல்ல ருசியுடனிருக்கும், இப்பருப்புகளை அல்வா மற்றும் இனிப்பு வகைகள், வாசனை பாக்கு வகைகளுடன் சேர்க்கின்றனர்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com