

சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக கிரிக்கெட் தொழில்நுட்ப நிர்வாகி செயல்பட்டு, ஆட்டத்தை தொடங்காமலே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. பார்வையற்றோருக்கான 2026 ஆடவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இந்த போட்டித் தொடரில் ஆசியாவை சேர்ந்த பல நாட்டு அணிகள் பங்கு பெற்றன. தொடரில் நடைபெற்ற சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் விளையாட இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் தேர்வாகின.
மதிப்புமிக்க 2026 ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தயாராக இருந்த நிலையில், மைதானத்தில் மழை குறுக்கிட்டது. மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்த நிலையில் இறுதிப் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2026 பார்வையற்றோர் ஆடவர் ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதாக அறிவித்தனர்.
இறுதிப் போட்டியை நடத்தாமலே பாகிஸ்தான அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது சர்வதேச அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. பாகிஸ்தான் அணிக்கு ஆசியக் கோப்பை வழங்கியதை இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம்(CABI) மிக கடுமையாக கண்டித்தது. மேலும் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய அணி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. தொழில்நுட்பக் குழுவின் இந்த நடவடிக்கையை இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் (CABI) வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதற்கு பார்வையற்றோர் உலக கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழு , இறுதிப்போட்டி நடத்தப்படா விட்டாலும் , தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற ரன் விகிதத்தின் அடிப்படையில் , அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பார்வையற்றோர் ஆசியக் கோப்பை வழங்கப்பட்டது என்று விளக்கம் கூறியுள்ளது.
இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து பார்வையற்றோர் உலக கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் , பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான சுல்தான் ஷா, இந்த முடிவை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இறுதிப்போட்டி நடத்தப்படாததால் அதில் கலந்து கொண்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் நடுவரும் அதை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. மேலும் அது இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் சங்கம் , போட்டியின் தொழில்நுட்ப விதிமுறைகள் பிரிவு 27-ஐ சுட்டிக்காட்டி , சமநிலையில் முடியும் அல்லது மழையால் தடைபடும் இறுதிப் போட்டிகளில் கோப்பையைப் பகிர்ந்தளிப்பதே சரியான நடைமுறை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
தங்களின் வாதத்தைத் தொழில்நுட்பக் குழு முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், பார்வையற்றோர் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் இயக்குநரும், பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சிலின் (PBCC) தலைவரும் இந்த முடிவுகளை எடுத்து , தங்கள் நாட்டு அணிக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளார் , என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ஒரு சர்வதேச சாம்பியன்ஷிப் தொடரின் முடிவைத் தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பும் இத்தகைய முயற்சிகள் விளையாட்டு அறத்திற்கு எதிரானது என CABI குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவெடுக்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை, நடுநிலைமை மற்றும் நேர்மை ஆகியவை முற்றிலும் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய சங்கம், இது குறித்து சர்வதேச விளையாட்டு அமைப்புகளிடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளது.