T20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வேகப் பந்து வீச்சாளர் பும்ரா விலகல்!

Jasprit Bumrah
Jasprit Bumrah
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 -இதுகுறித்து பும்ரா தெரிவித்ததாவது;

 இந்தியா vs தென்னாப்ரிக்காவுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, எனது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்போட்டித் தொடரிலிருந்து விலக நேரிட்டது.

இந்நிலையில் உடல்நிலை குணமாகாததால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலக நேரிட்டுள்ளது.

 -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வேகப் பந்து வீச்சாளராக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவரே பவிலிங்குக்கு தேர்நெடுக்கப் படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com