வரலாற்று சாதனை படைத்து உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா!

Jasprit bumra
Jasprit bumraImge credit: Sky sports

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐசிசியின் நேற்றைய ரிப்போர்ட்டின் படி ஐசிசி ஆண்கள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தைப் பிடித்து நம்பர் 1 பவுலர் என்ற சாதனை படைத்தது அதிகாரப்பூர்வமானது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே பந்துவீச்சாளர் பும்ரா மட்டும்தான் மூன்று வித கிரிக்கெட் தொடர்களிலும் முதல் இடத்தைப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஆவார். ஐசிசி ரிப்போர்ட்படி 2022ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பும்ரா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் தற்போது இந்த பட்டியலில் இவர் 6வது இடத்தில் உள்ளார். அதேபோல் டி20 தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்த பும்ரா தற்போது 89வது இடத்தில் உள்ளார்.

அந்தவகையில் பும்ரா அடுத்து டெஸ்ட் போட்டிகளில் சாதனைப் படைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் ஈடுப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பும்ரா 9 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணியை தோல்வியடையச் செய்தது.

பும்ரா 2019ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 27 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும் எடுத்து அபாரமாக விளையாடினார். பின்னர் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பூம்ரா 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து வெறித்தனமாக விளையாடினார். ஆனாலும் பும்ரா வெகுக் காலமாக இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில்தான் இருந்து வந்தார்.

இந்நிலையில் பும்ராவின் தொடர் முயற்சியால் இப்போது 34 டெஸ்ட் போட்டிகளில் 155 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்  பும்ராவில் மொத்த விக்கெட்டுகள் 881 ஆகும். இந்த வேகப்பந்து வீச்சாளரின் வேகம் தொடர்ந்தால் 1000 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரியவும் வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு நடந்தது தெரியுமா?
Jasprit bumra

அதேபோல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளார். இதுவரை அஸ்வின் 841 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் 851 விக்கெட்டுகளுடன் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com