நீரிழிவு நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

Can diabetics drink sugarcane juice?
Can diabetics drink sugarcane juice?
Published on

ந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா கூடாதா என்பது பலருடைய சந்தேகக் கேள்வியாக இருக்கிறது. 

நவீன யுகம் என்கிற பெயரில், தற்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் அதிகரித்து விட்டது. இதனால் ஒரு காலத்தில் அரிதாக இருந்த நோய் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கிவிட்டது. அதில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் சொல்லலாம். அந்த காலத்தில் இப்படி ஒரு நோய் இருப்பதே யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஏதாவது பிரச்சனை என்றாலே சுகர் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார்கள். 

உலகிலேயே பிரேசில் நாட்டில் தான் அதிக அளவில் கரும்பு விளைகிறது. இருப்பினும் அவர்களைத் தாண்டி நீரிழிவு நோயாளிகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது. பொதுவாகவே சுகர் இருப்பவர்கள் உணவு உட்கொள்ளும் முறையை நல்லபடிக் கையாள வேண்டும் எனச் சொல்வார்கள். இதன்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா என்பது பலருடைய சந்தேகமாக இருக்கிறது. 

வெயில் காலங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது உடலுக்குக் கெடுதல் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது. ஆனால் சிலர் இயற்கையாக இனிப்பு சுவை கொண்ட பானங்களை அருந்தலாம் என்பார்கள். அதிலும் கரும்பு ஜூஸ் குடித்தால் உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள். கரும்பு ஜூஸில் பொட்டாசியம், மெக்னீசியம், அயன், பி காம்ப்ளக்ஸ் என பல சத்துக்கள் இருக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என சொல்லப்படுகிறது. ஆனால் அதில் இருப்பதும் சர்க்கரை தான் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதைப் பருக்கலாமா என்பதில் பல சந்தேகங்கள் இருக்கிறது. 

இதற்கு மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "நீரிழிவு நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிப்பது தவறில்லை என்றாலும், அதை மிதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கரும்பு ஜூஸில் உள்ள சர்க்கரை காரணமாகவே நமக்கு உடனடி எனர்ஜி கிடைக்கிறது. இது இயற்கையாக வரும் சர்க்கரை என்றாலும் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய ஒன்றும் இல்லை. கரும்பிலிருந்து வரும் சர்க்கரையானது நேரடியாக நமது கல்லீரலில் ஜீரணம் ஆகிறது. 

எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதற்கு பதிலாக கரும்பு ஜூஸ் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம் டைப் 2 நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. இதை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், கரும்பு ஜூஸுக்கு பதிலாக ஓரிரு கரும்புத் துண்டை மென்று துப்பிவிடலாம். அதே நேரம் சுகர் நோயாளிகள் இதை தினசரி குடிப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்" என்கின்றனர். 

நீரிழிவு நோயாளிகள் எந்த வகை இனிப்பாக இருந்தாலும் அதை மிதமாக எடுத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com