இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியதை தொடர்ந்து, டேவிட் லாய்ட் இந்திய அணி குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்துவிட்டது.
நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி எதிரணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதியது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று இறுதிசுற்றுக்கு முன்னேறியது.
இதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவை எதிர்மறை கருத்துக்களே. சாம்பியன்ஸ் ட்ராபி ஆரம்பம் முன்னரே இந்திய அணி பல விஷயங்களை ஐசிசியிடம் கேட்டுக்கொண்டது. அதுவும் பாகிஸ்தானில் போட்டி நடத்துவதால்தான், இந்திய அணி தனது பாதுகாப்பிற்காக சில விஷயங்களை கேட்டது. அப்போதிலிருந்தே மற்ற நாட்டு வீரர்களுக்கு இது பிடிக்கவில்லை. சில நாட்டு வீரர்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டாலும், சிலர் விமர்சனம் செய்தே வந்தார்கள்.
இப்போது இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியதால், இந்த விமர்சனங்கள் அதிகமாகத்தான் செய்கின்றன.
அந்தவகையில் இதுகுறித்து டேவிட் லாயிட் பேசுகையில், “இது உலக கிரிக்கெட் நிகழ்வுகளில் மிகப்பெரிய நிகழ்வு ஆகும். ஆனால் இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் கேலிக்கூத்தானது. எனக்கு இதை யோசித்தாலே சிரிப்புதான் வருகிறது. வார்த்தை வரவில்லை. இது வெறும் முட்டாள்தனம். இதை எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டு அணிகள் கிளம்பி துபாய் போகின்றன. அந்த இரண்டு அணிகள் அங்கு அரை இறுதி விளையாடினாலும் விளையாடலாம், இல்லை அங்கிருந்து கிளம்பி பாகிஸ்தான் போய் விளையாட வேண்டியது இருக்கும் என்ற சூழ்நிலை எப்படிப்பட்ட முட்டாள்தனம்? உண்மையில் நான் நகைச்சுவையானவன். என்னால் இதற்கு சிரிக்கத்தான் முடியும். ஆனால் களத்தில் விளையாடும் வீரர்கள் இந்த சம்பவத்திற்கு நிச்சயம் சிரிக்க முடியாது.” என்று பேசியுள்ளார்.