அதிக போபியாக்களைக் (பயம்) கொண்ட ஹாலிவுட் பிரபலம் இவர்தான்...

Fears
Fears
Published on

ஒளிவு மறைவு இல்லாமல், வெட்கப்படாமல் சொல்லுங்க, உங்களுக்கு எதைக் கண்டால் பயம்? உங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டு?

உலகில் குறைந்தபட்சம் 350 போபியாக்களால் ஆண்களும் பெண்களும் பயப்பட்டு அவதிப்படுகின்றனர்!

150 போபியாக்களின் பட்டியலில் பெரும்பாலான மக்கள் வந்து விடுகின்றனர்.

பொதுவாகப் பெண்களிடம் கரப்பான் பூச்சியையோ எலியையோ சிலந்தியையோ காட்டினால் போதும்... 'ஆ, ஓ'வென்று அலறிக் கூச்சல் போட்டு கூட்டத்தையே கூட்டி விடுவர்.

போபியா என்பது உணர்வுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவலைப்பட வைத்து பயத்தை ஊட்டி அதிர வைக்கும் ஒன்று.

சிலர் லிப்டில் ஏற மாட்டார்கள்.

இன்னும் சிலர் விமானத்தில் பயணப்படவே மாட்டார்கள்.

தங்களின் பழைய கால அனுபவங்கள், நண்பர், குடும்பத்தினர் ஆகியோர் பட்ட அவஸ்தைகள், நெருங்கியவரின் உயிரிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் போபியாக்கள் ஏற்படுகின்றன.

இது தர்க்கரீதியாகத் தவறு என்பதும் போபியாக்காரர்களுக்குத் தெரியும். என்றாலும், பயம் பயம்தானே!

சிறுவயதில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவன் முதுகில் கரப்பான் பூச்சியையோ அல்லது சிலந்தியையோ விட்டெறிந்தால் வாழ்நாள் முழுதும் கரப்பான்பூச்சி பயம், சிலந்தி பயம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வரும்.

தெருவில் இறங்கி நடக்க பயம் என்றால் அது AMBULOPHOBIA.

ஆனால் இதற்கெல்லாம் இப்போது சிகிச்சை முறை உண்டு.

தெருவில் நடக்கப் பயப்படுவோரை குழுவாகச் சேர்த்து மெதுவாக மெல்ல மெல்ல தெருவில் நடக்கப் பழக்கப்படுத்துவார்கள்.

BEHAVIOUR THERAPY என்ற சிகிச்சையில் பல போபியாக்கள் நாளடைவில் மறைந்து விடும். பூனையைக் கண்டால் பயப்படுபவர்களுக்கும் கூட சிகிச்சை உண்டு.

சாமான்யர்களுக்கு மட்டுமல்ல, பிரபலங்களுக்கும் போபியாக்கள் உண்டு.

லிஸ்டைப் பார்ப்போமா?

விமானப் பயணம் (AEROPHOBIA)

விமானப் பயணம் என்றாலேயே ஜெனிபர் அனிஸ்டன், டோனி கர்டிஸ், முகம்மது அலி, மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோருக்குப் பயம்!

உயரத்தைக் கண்டால் பயம் (ACROPHOBIA)

உலகின் பெரிய கோபுரமான ஈபில் டவரை வடிவமைத்த குஸ்டாவ் ஈபிலுக்கு உயரத்தை நினைத்தாலேயே பயம். டைரக்டர் உடி ஆலனுக்கும் உயரம் என்றாலேயே பயம். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதிக போபியாக்களைக் கொண்ட ஹாலிவுட் பிரபலம் இவர் என்பது தான் அது!

பூனைக்குப் பயம் (AILUROPHOBIA)

வரலாற்றுப் பிரபலங்களான ஜூலியஸ் சீஸர், நெப்போலியன், முஸோலினி, அலெக்ஸாண்டர் தி கிரேட் ஆகியோருக்குப் பூனை என்றாலேயே பயம். இது ஒரு நீண்ட பட்டியல். இதில் ஹிட்லர், செங்கிஸ்கான், வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பலரும் வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சைனோபோபியா (Cynophobia) - இதுவும் ஒரு வகை பயமே! எதை பற்றியது?
Fears

பொதுக்கூட்டத்தில் பேச பயம் (GLASSOPHOBIA)

பல பிரபலங்களுக்கு மக்கள்திரளைக் கண்டு அவர்களிடம் பேசுவது என்றாலேயே பயம். பிரபல நடிகை மர்லின்மன்ரோ, நடிகர் லாரன்ஸ் ஆலிவர் ஆகியோர் ஸ்டுடியோவில் அபாரமாக நடிப்பார்கள். ஆனால் பொதுமேடை என்றாலேயே நடுநடுங்கி விடுவர்.

குதிரை பயம் (EQUINOPHOBIA)

நடிகர் ராபர்ட் பாட்டின்ஸனுக்கு குதிரைகள் என்றாலேயே பயம். இவரது படமான வாடர் ஆஃப் எலிபண்ட்ஸ் படத்தில் வரும் குதிரைக் காட்சியை எடுப்பதற்குள் படக்குழுவினருக்கு போதும் போதும் என்றாகி விட்டது!

கரப்பு, சிலந்தி, பாம்பு பயம் (KATSARIDAPHOBIA, ARACHNOPHOBIA, OPHIDIOPHOBIA)

இதற்கு பட்டியலே வேண்டாம். டைரக்டர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கிலிருந்து நமது வீட்டு அம்மணிகள் வரை இந்த லிஸ்டில் அடக்கம்!

கண்ணாடி பயம் (EISOPTROPHOBIA)

பேவாட்ச் படத்தில் நடித்த பிரபல நடிகை பமீலா ஆண்டர்ஸனுக்குக் கண்ணாடியைக் கண்டாலே பயம்.

350 போபியாக்களையும் அதற்குப் பயப்படுவர்களையும் ஒரு பட்டியல் எடுத்துத் தொகுக்க ஆரம்பித்தால் அது போபியா களஞ்சியம் ஆகிவிடும்!

ஆனால் இதற்கெல்லாம் சிகிச்சை உண்டு. அது சரி, அதிக போபியாக்களைக் கொண்ட ஹாலிவுட் பிரபலம் இவர் என்பது தான் அது அந்த சிகிச்சைக்கே பயம் என்றால் என்ன செய்வது?!

இதையும் படியுங்கள்:
The Paradox of Fear: பயம் என்ன செய்யும் தெரியுமா? 
Fears

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com