சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்துவிட்டது. நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி எதிரணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதியது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று இறுதிசுற்றுக்கு முன்னேறியது.
இதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவை எதிர்மறை கருத்துக்களே.
நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் சரிசமமான பலத்தில் விளையாடி வருவதால், யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருக்கிறது.
இது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. ஏனெனில், இந்திய அணி கோப்பை வென்றால்தான், பிசிசிஐயின் கோபத்தை குறைத்து ரூல்ஸையும் குறைக்க முடியும். அதேபோல், ரோஹித் ஷர்மாவும் கேப்டனாக தொடர முடியும்.
அதேபோல், இந்திய அணி வெற்றிபெற்றாலும், இது இந்தியாவுக்கு சாதகமான தொடர் என்றும் கூறிக்கொண்டு வருவார்கள்.
எது எப்பைடியோ? தற்போது இந்திய அணி வீரர்களில் மிகவும் முக்கியமான வீரர் ஹார்திக் பாண்டிய இறுதி போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்ற செய்திகள் கசிந்துள்ளன.
தொடர் முழுவதும் ஹார்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் விளையாடி வருவதால் பவர் பிளேயில் பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியா உள்ளார். 2023 ஒரு நாள் உலக கோப்பையில் பாதியில் காயம் காரணமாக இவர் வெளியேறியதால் இந்திய அணி சற்று தடுமாறியது. இதனாலும் கோப்பையை இழந்தது என்று சொல்லலாம்.
இதே நிலைதான் தற்போதும். காயம் காரணமாக ஹார்திக் பாண்டிய விளையாடமாட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும் வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.