சாம்பியன்ஸ் டிராபி 2025: அட்டவணை வெளியீடு!

Champions trophy
Champions trophy
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும்.

இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.

8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முளைத்த உருளைக்கிழங்கு இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 
Champions trophy

இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலும் விளையாடப்படும்.

ஒவ்வொரு பாகிஸ்தான் மைதானமும் தலா மூன்று குழு ஆட்டங்களைக் கொண்டிருக்கும். லாகூர் இரண்டாவது அரையிறுதி போட்டியை நடத்துகிறது.

இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறாவிட்டால் லாகூரில் மார்ச் 9ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டம் துபாயில் ஆடப்படும்.

இரு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறவுள்ளது. பிப்ரவரி 20ம் தேதி இந்தியா தங்களுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை துபாயில் எதிர்கொள்கிறது. 21ம் தேதி ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் கராச்சியில் பல பரிட்சை நடத்துகிறது. பிப்ரவரி 22ம் தேதி ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துடன் லாகூரில் மோதுகிறது.

இதையும் படியுங்கள்:
குறை சொல்வதை நிறுத்துங்கள். மாற்றத்தை மனதார ஏற்கத் தவறாதீர்கள்!
Champions trophy

இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. 24ம் தேதி வங்கதேசமும் நியூசிலாந்தும் ராவல்பிண்டியில் விளையாடும். பிப்ரவரி 25ம் தேதி ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகள் ராவல்பிண்டியில் மோதுகிறது.

26ம் தேதி ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்து லாகூரில் மோதுகிறது. பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானும் வங்கதேசமும் ராவல்பிண்டியில் மோதுகிறது. பிப்ரவரி 28ம் தேதி ஆப்கானிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் லாகூரில் மோதுகிறது. மார்ச் ஒன்றாம் தேதி தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் கராச்சியில் விளையாடுகிறது.

மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடுகிறது. மார்ச் 4ம் தேதி முதல் அரை இறுதி ஆட்டம் துபாயிலும், மார்ச் 5ம் தேதி இரண்டாவது அரையிறுதி ஆட்டம் லாகூரிலும் நடைபெறும். மார்ச் ஒன்பதாம் தேதி இறுதிப்போட்டி லாகூரில் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com