பல துறைகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் தனி ஈஈர்ப்பு இருப்பது மறுக்க முடியாத ஒன்று. அவற்றைப் பற்றி ஒரு ஒப்பீடு.
ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில் இல்லை.
பல ஆண்டுகள் அன்றைய மெட்ராசில் ( இன்றைய சென்னையில் ) கோடம்பாக்கம் பகுதி திரை துறையில் நடிக்க மற்றும் அது சம்பந்தமான துறைகளில் பங்கு
பெறுபவர்களை கவர்ந்து இழுத்த வண்ணம் இருந்தது.
அந்த கால கட்டத்தில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்சுக்கள் அத்தி பூத்தார் போல் நடைப் பெரும். அவ்வளவு பிரபலம் அடையவில்லை.
சினிமாப் படங்கள் தயாரிக்கப் பட்டு வந்தன வருடம் முழுவதும்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் போது புது படங்கள் வரிசைக்கட்டி நின்றன ரீலீசுக்காக.
டெஸ்ட் கிரிக்கெட் பொங்கல் பண்டிகை பொழுது தொடர்ந்து 6 நாட்கள் ( ஒரு ஓய்வு தினம் உட்பட ) நடைப் பெற்றன.
அன்றைய மவுண்ட் ரோடு ( இன்றைய அண்ணா சாலையில் ) மற்ற இடங்களில் சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதிய நாட்களும் உண்டு.
டெஸ்ட் மேட்ச் தினங்களில் கார்ப்பரேஷன் ஸ்டேடியம் பிறகு சேப்பாக் மைதானத்தில் கிரிகெட் ரசிகர்களின் ஆராவரம் விண்ணை தொட்டது. சுமார் 45000க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் என்றால் கேட்கவா வேண்டும்.
வருடங்கள் உருண்டு ஓட கிரிக்கெட் ஆட்டத்தின் மதிப்பு கூட ஆரம்பித்தது.
விதம் விதமாக கிரிக்கெட் ஆட்டங்கள், போட்டிகள் இடம் பிடிக்க ஆரம்பித்து இப்பொழுது எல்லாம், மேட்ச்சுக்கள் இல்லாத நாட்களே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
மாறுதலுக்கு ஏற்ப சினிமா தியேட்டார்கள் காணாமல் போய் விட்டன.
ஒரு சில குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் தவிர பலரால் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை சினிமா துறையில்.
போட்டிகள் மிகுந்து விட்டன. ஆயிரங்களில் ஆரம்பித்த சினிமா துறை கோடிகளுக்கு கீழே பார்க்க தயங்குகின்றது.
கிரிக்கெட் விளையாடுபவர்களின் மதிப்பு உயர்ந்து வருகின்றது ஜெட் வேகத்தில்.
கிரிக்கெட் துறையிலும் கோடிகளின் மதிப்புக்கு தனி மரியாதை.
இரண்டு துறைகளிலும் பணம் தவிர புகழுக்கும் அடைந்த புகழை தக்க வைத்துக் கொள்ளவும் போட்டிகளுக்கு பஞ்சமில்லை.
இரு துறைகளிலும் விசிறிகள், ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இன்னும் சினிமா துறையில் ரிடையர்மென்ட் வயது வரவில்லை.
ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்கு ரிடையர்மெண்ட் வயது பல வீரர்களுக்கு கதவை தட்டுக்கின்றது. ரிடையர் ஆனாலும் ஒரு சிலருக்கு வாய்ப்புக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன, முக்கியமாக வர்ணனையாளராக திகழ.
சினிமா துறைக்கு போட்டியாக சின்ன திரை, ஓடிடி போன்றவை வலம் வந்து கொண்டிருக்கின்றன.
கிரிக்கெட் ஆட்டங்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாகவும், பார்வையாளர் ரசிகர்களை அதிகரிக்கவும், கிரிக்கெட் மேலும் பிரபலப் படுத்தவும் தொலைக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றன.
இரண்டு துறைகளிலும் முக்கிய இடங்களில் இடம் பிடிக்க அடுத்த தலை முறையினரை காந்தம் போல் கவர்ந்து இழுப்பது அவற்றில் கிடைக்கும் பணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கிரிக்கெட் துறையிலும் மகளிர் பங்கு பெரும் கிரிக்கெட் ஆட்டங்கள் புகழ் பெற்று வருகின்றன.
இனி வரும் காலங்களில் கிரிக்கெட் மற்றும் சினிமா இரண்டும் மேலும் வளர்ச்சி அடைந்து புதுமைகளை புகுத்தி ரசிகர்களை அதிகமாக மகிழ்விக்கும் என்று எதிர் பார்க்கலாம்.