சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை 100 கோடி ஜிபி டேட்டாவில் பார்த்து சாதனைப் படைத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போமா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது. தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக மோதிய இந்திய அணி தோல்வியே சந்தித்து வந்தது. ஆனால், கடைசியாக சாம்பியன்ஸ் ட்ராபியில் வென்று இந்திய அணி கம்பேக் கொடுத்தது.
இந்திய அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தார்கள். ஆனால், இதனை மற்ற உலக நாடுகள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. சாம்பியன்ஸ் ட்ராபி ஆரம்பம் முன்னரே இந்திய அணி பல விஷயங்களை ஐசிசியிடம் கேட்டுக்கொண்டது. அதுவும் பாகிஸ்தானில் போட்டி நடத்துவதால்தான், இந்திய அணி தனது பாதுகாப்பிற்காக சில விஷயங்களை கேட்டது. அப்போதிலிருந்தே மற்ற நாட்டு வீரர்களுக்கு இது பிடிக்கவில்லை. சில நாட்டு வீரர்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டாலும், சிலர் விமர்சனம் செய்தே வந்தார்கள். அப்படியிருந்தும் இறுதி போட்டியை பலர் காண வந்தனர்.
வெற்றிபெற்ற இந்திய அணி பெரும் பரிசு தொகையையும் பிசிசிஐ வழங்கியது. இப்போட்டியை நேரில் பார்த்தவர்களுடன் பலர் செல்போனிலும், பலர் தொலைக்காட்சியிலும் பார்த்து கண்டு கழித்தனர். அதன்படி போன், லேப்டாப், டேப் மூலமாக பார்த்ததன் மூலமாக 100 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்கள் உலக சாதனை படைத்துள்ளார்கள்.
செல்போன், லேப்டேப் போன்றவற்றின் மூலமாக போட்டியை கண்டுகளிக்க 100 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தி உள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஐந்து முதல் 6 மணி நேரம் வரை ஒளிபரப்பாகும் ஒரு போட்டியை இவ்வளவு பேர் இத்தனை ஜிபி செலவில் பார்த்தது பெரிய அதிசயம்தானே. இதுவரை இப்படி ஒரு சாதனை படைக்கப்படவில்லை.
இதற்கு முழு காரணம், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் மக்கள் மட்டும்தான் என்று கூறிவிட முடியாது. ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் சேர்ந்துதான் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள்.