
சிதறு தேங்காய் என்பது விநாயகருக்கு உடைக்கப்படும் ஒரு தேங்காய் ஆகும். சகல பாபங்களையும் தோஷங்களையும் போக்கவும், நாம் செய்யும் செயல்களில் தடை ஏற்படாமல் இருக்கவும் இந்த வேண்டுதல் செய்கிறோம். சிதறு தேங்காய் உடைவதைப் போல் நம் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது என்று ஆன்மிகவாதிகள் கூறுவார்கள். நம் துன்பங்களும் சிதறிப் போவதாக அறியப்படுகிறது.
எப்படி தேங்காயை ஓடு மறைக்கிறதோ அதுபோல் அறியாமை எனும் மாயையால் ஜீவாத்மா பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. இறைவன் சன்னதியில் அறியாமை எனும் மாயையை அகற்றி பரமானந்த பேரத்புதத்தை நுகரச் செய்யும் செயல்தான் சிதறு தேங்காய் போடுவதன் தத்துவமாகும்.
சிதறு தேங்காய் உடைக்கும் போது செய்யக் கூடாதவை
ஒன்று, மூன்று என்று ஒற்றைப் படையில் தான் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். இரண்டு நான்கு என்று இரட்டைப் படையில் உடைக்கப் கூடாது.
பெண்கள் சிதறு தேங்காய் உடைக்கப் கூடாது. குறிப்பாக கர்ப்பமான பெண்கள் வீட்டில் கூட தேங்காய் உடைக்கப் கூடாது.
சிதறு தேங்காய் எண்ணிக்கையும் பலன்களும்
ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பதால் நினைத்த காரியம் அல்லது செல்லும் கார்யம் தடை இல்லாமல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.
தடைகளை தகர்த்தெரிய வழிப் பிள்ளையாருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விட்டுச் செல்லலாம்.
செய்யும் தொழிலில் உயர்ந்து காட்டவும், நல்ல வேலையில் அமர வேண்டும் என்று நினைப்பவர்களும், நோயால் வாடுபவர்களும், மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க, ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சிதறு தேங்காய்களை உடைக்க வேண்டும்.
தீரா கடன் தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை வழிபடுங்கள்.
பிள்ளை இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற புதன் கிழமையில் தொடர்ந்து 9 வாரங்களாக 9 தேங்காயை உடைத்து பிள்ளையாரை வழி பட்டால் புத்திர பாக்யம் உண்டாகும். .
அதுபோல் திருமணத்தடை நீங்க 11 சிதறு தேங்காய் உடைத்து, நேரத்திகடன் செய்ய, தடைகள் நீங்கும்.