"விருதுகள் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன" - Cristiano Ronaldo!

Cristiano Ronaldo.
Cristiano Ronaldo.

போர்ச்சுகல் நாட்டின் பிரபல கால்பந்து வீர்ர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பலூன் டி ஓர் மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விருதுகளை குறைகூறி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், விருதுகள் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2023-23 ஆம் ஆண்டின் பலூன் டி ஓர் விருதை வென்றுள்ளார். அதுமட்டுமல்ல, கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தமது அணிக்கு கோப்பை பெற்று தந்ததற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் சிறந்த கால்பந்து வீர்ருக்கான விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் இரு வீர்ர்களையும் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி, விருது பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரொனால்டோ மேலும் கூறுகையில், அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பது தெரியும். அதனால்தான் விருது வழங்கும் நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்றார். துபையின் குளோப் கால்பந்து விருது, அதிக கோல் அடித்ததற்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை ரொனால்டோ வென்றுள்ளார்.

39 வயதான போர்ச்சுகல் கால்பாந்து வீர்ரான ரொனால்டோ, விருதுகளை குறைகூறி விமர்சித்தார். உண்மையின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில்லை என்றார். அவர் எந்த குறிப்பிட்ட கால்பந்து வீர்ரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. மெஸ்ஸி விருதுக்கு தகுதியற்றவர் என்றும் அவர் குறிப்பிடவில்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் மூளையை சரி செய்யும் Dopamine Fasting!
Cristiano Ronaldo.

ஒருவகையில் இந்த விருதுகள் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக நான் நினைக்கிறேன். ஒரு சீசன் மூழுவதும் ஒருவரின் விளையாட்டு எப்படி இருந்தது என்று பார்க்கவேண்டும். அதற்காக மெஸ்ஸி அல்லது எம்பாப்பே அல்லது ஹாலண்ட் ஆகியோர் தகுதியற்றவர்கள் என்று நான் கூறவில்லை. விருதுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. குளோப் சாசர் விருது எனக்கு கிடைத்ததற்கு காரணம் அதில் உண்மை இருந்தது. நான் எத்தனை கோல் போட்டேன் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அந்த விருது உண்மையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அதனால் விருது பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றார் ரொனால்டோ.

ரொனால்டோ தற்போது செளதி புரோலீக்கில் அல்-நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார். லீக் அட்டவணையில் அவரது அணி 2 வது இடத்தில் உள்ளது. 19 போட்டிகளில் விளையாடிய பின்னர் அல்-ஹிலால் அணியைவிட 7 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com