மீண்டும் நேருக்கு நேர் மோதும், ரொனால்டோ - மெஸ்ஸி!

Messi - Ronaldo
Messi - Ronaldo

கால்பந்து விளையாட்டில் உலக அளவில் ஜாம்பவான்களாக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி இருவரும் மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

ரியாத் சீசன் கோப்பைக்கான கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இன்டர் மியாமி மற்றும் அல்-நாஸர் அணிகள் மோதுகின்றன. இதில்தான் இரு வீரர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

இருவரும் 13 முறை பலோன் டி'ஓர் விருதுகளைப் பெற்றுள்ளனர். இதில் ஆர்ஜென்டினா வீரர் 8 முறையும் போர்த்துக்கீசிய வீரர் 5 முறையும் வென்றுள்ளனர். இருவரும் கால்பந்து ஜாம்பவான்கள் என்பதற்கு கடந்த 20 ஆண்டுகளில் இருவரும் பெற்ற தங்கப் பந்துகளே சான்றாகும்.

இந்த ஆண்டு ஜனவரியில் பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்) மற்றும் ரியாத் ஆல் ஸ்டார் லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு ஜாம்பவான்களும் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் பிரெஞ்ச கிளப், ஆல் ஸ்டார் அணியை தோற்கடித்தது. (சுனில் சேத்ரி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகிய மூவரும் கால்பந்து போட்டியில் அதிகம் கோல் போட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

பிரபலமான இருவரும் கால்பந்து மைதானத்தில் சந்திப்பது இதுவே கடைசி முறை என்று ரசிகர்கள் பலரும் நினைத்தனர். ரியாத் சீசன் கோப்பை, ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் இரு ஜாம்பவான்களையும் பார்ப்பதற்கு இன்னொரு வாய்ப்பை அளித்துள்ளது.

இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் மதித்துத்தான் பேசுவார்கள். சமீபத்தில் ரொனால்டோ ஒரு பேட்டியில், “எங்களுக்குள் எந்த விரோதமும் இல்லை. இருவரையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரொனால்டோவை ஒருவர் விரும்புவதால் மெஸ்ஸியை வெறுக்கிறார் என்று அர்த்தமல்ல, அதேபோல மெஸ்ஸியை ஒருவர் விரும்புகிறார் என்றால் என்மீது விரோதம் பாராட்டுகிறார் என்று சொல்லமுடியாது. நாங்கள் கால்பந்தில் சிறப்பாகவே விளையாடுகிறோம். கால்பந்து வரலாற்றை மாற்றியவர்கள் நாங்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எங்களை மதிக்கிறார்கள். அதுதான் எங்களுக்கு வேண்டும்” என்று முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணி கால்பந்து வீரரும் போர்த்துகீசியருமான ரொனால்டோ பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
போட்டிக்கு முன் ஆடுகளத்தை முகமது ஷமி பார்வையிடுவதில்லை, ஏன் தெரியுமா?
Messi - Ronaldo

மெஸ்ஸி கூறுகையில், “கால்பந்து விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால், எங்களிடையே நடப்பது யுத்தம். நாங்கள் போட்டி மனப்பான்மை உள்ளவர்கள் என்பதால் எதிர் எதிரே மோதுகிறோம். ஒருவரை மற்றவர் வெல்லவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாகும். நாங்கள் இருவரும் கால்பந்து ஆட்டத்தில் மோதுவதை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இருவரில் யார் உயர்ந்தவர்கள் என்று ரசிகர்களிடையே பல மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெறும். எனினும் மெஸ்ஸி 8 முறை பலோன் டீ'ஓர் விருதும் 2022 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஆர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தந்து சாதனை படைத்தவுடன் இந்த விவாதம் ஓய்ந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com