CSK Vs GT: தோனியை சிக்ஸே அடிக்க விடமாட்டோம் – GT யின் மாஸ்டர் ப்ளான்!

Gill and Coach Ashish
Gill and Coach Ashish
Published on

ஐபிஎல் தொடரின் 59வது போட்டி இன்று சென்னை அணி மற்றும் குஜராத் அணி இடையே நடைபெறவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோனியை சிக்ஸே அடிக்கவிடமாட்டோம் என்று குஜராத் அணி ஒரு மாஸ்டர் ப்ளானைப் போட்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சில பந்துகளை மட்டுமே விளையாடி, அதில் சிக்ஸ், பவுண்டரீஸ் அடித்து தோனி அசத்துகிறார். இதனால் ரசிகர்கள், இறுதியாக தோனி விளையாடுவதற்காகவே முதலில் பேட்டிங் செய்பவர்கள் தோற்க வேண்டுமென்றெல்லாம் வேண்டுகின்றனர். சென்னை அணி தோல்வியடைந்தாலும், தோனி விளையாடினால், அணியே வெற்றிபெற்றதுபோல் ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர்.

இதற்கிடையே தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் அப்போதும் அணியை வழிநடத்தவும் கேப்டனுக்கு துணையாகவும் இருக்கவே அவர் அணியில் தொடர்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க மறுப்பக்கம், இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்கினால் அவரை எப்படி சமாளிப்பது என்று குஜராத் அணி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

காயம் காரணமாக தோனி ரன் ஓட முடியாது என்பதால், கடைசி ஓவர்களில் களமிறங்குகிறார். கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசுவார்கள் என்பதால், அதற்கு ஏற்ப வேகப் பந்துவீச்சாளர்களை வைத்தே வலைப் பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். இதனை பஞ்சாப் அணி நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு ராகுல் சாஹரை பந்து வீச வைத்து தோனி ரன்னை கட்டுப்படுத்தியது.

தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாததாலும், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக பயிற்சி மேற்கொள்ளாததாலும், அவரால் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் எளிதாக பவுண்டரி அடிக்க முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
PBKS Vs RCB: பஞ்சாப் அணி தொடரிலிருந்து வெளியேறியது! பெங்களூரு அணி நிலை என்ன?
Gill and Coach Ashish

பஞ்சாப் அணியின் அதே திட்டத்தை குஜராத் அணி இன்று கையில் எடுக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வந்தால், கடைசி இரண்டு ஓவர்களின் போது தான் களமிறங்குவார். அப்போது சுழற் பந்துவீச்சாளரை பந்து வீச வைத்து அவரை கட்டுப்படுத்த குஜராத் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனெனில், இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வியடைந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது.

எனவேதான், அணியின் கேப்டன் கில்லும் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் தோனியை சிக்ஸே அடிக்கவிட கூடாது என்று பெரிய திட்டம் தீட்டியுள்ளார்கள். இவர்களின் இந்தத் திட்டத்தால், சென்னை சமஸ்தானமே பயத்தில் உள்ளதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com