#BREAKING IPL 2026: சென்னை கோட்டையில் வெற்றிக் கொடி நாட்டிய குஜராத்: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இன்றைய 37-வது லீக் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி குஜராத் அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது.
Gujarat Titans team
Gujarat Titans teamimage credit- hindustantimes.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று இருபோட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடியதில் 3-ல் வெற்றியை ருசித்துள்ளது.

இரு அணிகளும் 4-வது வெற்றியை ருசிக்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 4 வெற்றியை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் குஜராத் அணி 4 வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com