Lucknow palyers Hugs each other after winning
CSK Vs LSG

CSK Vs LSG: புள்ளிப்பட்டியலில் சென்னை அணி சரிவு… பிளே ஆஃப் செல்லமுடியுமா?

Published on

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடையிலான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது.

டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் ஓப்பனராகக் களமிறங்கிய ரஹானே 1 ரன்னுடன் வெளியேறினார். பின், கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸ் உட்பட 108 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். அடுத்ததாகக் களமிறங்கிய மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 16 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினார்கள். ஷிவம் டூபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக தோனி 1 பந்திற்கு ஒரு பவுண்டரி அடித்தவுடன் அணியின் 20 ஓவர்கள் முடிந்தது.

இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்து, எதிரணிக்கு 211 என்ற ரன்களை இலக்காக அமைத்தது.

லக்னோ அணியில் பேட்டிங்கில் களமிறங்கிய டி காக், டக் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல், கேப்டன் கே.எல்.ராகுலும் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து இறுதிவரை நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிக்கல் 13 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும், எடுத்து வெளியேறினார்கள். தீபக் ஹூடா இறுதிவரை நின்று 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து இலக்கை  அடைய உதவினார். இதனால் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

இதையும் படியுங்கள்:
கடைசி ஓவர்கள்!
Lucknow palyers Hugs each other after winning

அந்தவகையில், லக்னோ அணி 8 போட்டிகளில் 5 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இனி விளையாடும் 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகள் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். சென்னை அணி இன்னும் 3 போட்டிகள் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com