கடைசி ஓவர்கள்!

M.S.Dhoni
M.S.Dhoni

1960 பிரிஸ்பேன் மைதானம்:

மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் வேக பந்து வீச்சாளர் வெஸ் ஹால், அந்த டெஸ்ட் மேட்சின் கடைசி ஓவர் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த 8 பந்துகள் ஓவரின் ஒவ்வொரு பந்தும் விதவிதமான நடவடிக்கைகளை நிகழ்த்திக்கொண்டு இருந்தது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே சென்றது. மைதானம் முழுவதும் பதற்றம், கூடுதல் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு அணி வீரர்களுக்கும்.
8வது பந்தை, கடைசி ஓவரின் கடைசி பந்தை வீச நடந்து சென்றுகொண்டிருந்த பவுலர் ஹாலிடம், கேப்டன் பிரேங்க் ஒர்ரெல் கூறியது ஒன்றே ஒன்றுதான், தயவு செய்து நோ பால், போட்டு விடாதீர்கள். ஹால் ஓடி வந்து சரியான பந்தை வீசினார். டெஸ்ட் மேட்ச் முடிவடைந்து சரித்திரத்தில் இடம் பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் டை (Tied Test) உருவானது.
அந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடப்பட்டு வந்தது. இருந்தும் கேப்டன் பிரேங்க் ஒர்ரெல், தனது பவுலரின் குணாதிசியங்களை மிகத் துல்லியமாக அறிந்து வைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் (கடைசி பந்து வீச பட வேண்டிய சூழ்நிலைக்குத் தேவையான) அறிவுரை கூறினார், சுருக்கமாக்கவும், அழுத்தம் திருத்தமாகவும். அன்றைய குறிப்பிட்ட சூழ்நிலையிலேயே கடைசி ஓவரும், கடைசி பந்தும் மிக முக்கியத்துவம் பெற்றது.

இன்றைய, மிகவும் மாறி வரும் ஐ பி எல் சூழ்நிலையில், கடைசி ஓவரின் முக்கியத்துவம் ரசிகர்களால் கண்கூடாகப் பார்க்கமுடிகின்றது.

ரசிகர்களுக்கே அப்படி என்றால், ஒவ்வொரு மேட்சின் முடிவைச் சொல்லும் அந்தக் கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்து வீசுவதற்கு முன்பு, வீசும்பொழுது, வீசிய பிறகு அங்கு பிட்சில், மைதானத்தில் இருக்கும் ஆட்டக்காரர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பது சுலபமாக பிறரால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ரிசல்ட் எந்த அணி பக்கம் சாயும் என்று கணிப்பதும் மிகவும் கடினம்.

பொதுவாக அத்தகைய மேட்சுக்களில் கடைசி ஓவர் போடுவதற்கான தயாரிப்பு, 18வது ஓவர் வீசுவதற்கு முன்பே முனைப்போடு தயாராக வேண்டும். அந்தச் சமயத்தில் எந்த பவுலர் எப்படி பந்து வீச வேண்டும் என்று நினைத்துப் பார்த்து, குறிப்பிட்ட பவுலருடன் கலந்தாலோசித்து, தேவையான அறிவுரைகளைக் கூற வேண்டியது, கேப்டனின் கடமை. கட்டாயம் கேப்டன் அந்தத் தருணத்தில் தனது பங்களிப்பை அணியின் வெற்றிக்காக செயல்படுத்த வேண்டும். அனுபவ வீரர்களின் ஆலோசனைகளைத் தேவையானால் பெற்றும் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
IPL ஆட்டமா? அதிரடி ஆட்டமா?
M.S.Dhoni

கருத்து வேறுபாடுகள் (difference of opinion) ஈகோ பிரச்னைகள் காரணமாக, கேப்டன் மற்றும் அனுபவ வீரர்களின் விட்டேத்தியான அணுகுமுறை இருப்பின், வெற்றி பெற வேண்டிய மேட்ச்சுக்கள் கை நழுவிப் போகும்.

கடைசி ஓவர் வீசுவதற்கு முன்பு இரு அணி வீரர்களுக்கும் நன்றாக தெரியும், தங்கள் அணி வெற்றி பெற, என்ன என்ன தேவை என்று. அந்தக் குறிப்பிட்ட சமயத்திற்கு ஏற்ப மனதை ஒரு நிலை படுத்தி, பதற்றப்படாமல் ஆட வேண்டும்.

அந்த ஓவரின் ஒவ்வொரு பந்தும் வீசும்போது, டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்ப்புக்கள்(Expectations) எகிறும். இது, ரசிகர்களுக்கும், மைதானத்தில், ஆடுபவர்கள் இருவருக்கும் சாலப் பொருந்தும். அமைதி அறவே காணாமல் போய் இருக்கும். கூச்சல், சப்தம், ஆரவாரம் காதுகளைத் துளைக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் விளையாடி சாதகமான ரிசல்ட் கொடுக்க போராட வேண்டிய இரு அணிகளின் ஆட்டக்காரர்களின் மன அழுத்தம் எப்படி இருக்கும் என்று விவரிக்க இயலாது.
ஆனால், இப்படிப்பட்ட நிலையில் செயல்பட வேண்டும் என்பதை ஐ பி எல் வீரர்கள் நன்கு அறிவார்கள்.
வெற்றி பெரும் அணியின் வீரர்கள் கவனத்தைச் சிதற அடிக்காமல், கவனத்துடன் ஆடி இலக்கை அடைகிறார்கள்.

அதிக ஆர்வம் கொண்டு படபடப்புடன் ஆடி இலக்கை இழக்கிறார்கள், மற்றொரு அணியினர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com