சென்னைக்கு அதிர்ச்சி தோல்வி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய ஐதராபாத்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 63-வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி மாஸ் வெற்றியை பதிவு செய்தது.
CSK vs SRH
CSK vs SRHimage credit -thestatesman.com
Updated on

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.

சென்னை அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டால் சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறி விடும். இதனால் இன்று வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் காணுகிறது.

ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சனையும் இன்றி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கலாம். ஒன்றில் வென்றால் மற்ற ஆட்டங்களில் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த ஐதராபாத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 8-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து முதலில் களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி, அதிரடியாக விளையாடி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐதராபாத் அணி 8-வது வெற்றியை பதிவு செய்தது.

logo
Kalki Online
kalkionline.com