ஐபிஎல் 2026: டெல்லியை வீழ்த்தி கெத்து காட்டிய கொல்கத்தா..!!

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
kolkata knight riders
kolkata knight ridersimage credit - hindustantimes.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

டெல்லி அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 8-ல் தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.

கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் ஆடி 6-ல் தோல்வி, 3-ல் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 19-ல் கொல்கத்தாவும், 15-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களம் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் கொல்கத்தா அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.

logo
Kalki Online
kalkionline.com