DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

Rishab Pant and Sanju Samson
DC Vs RR

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56வது போட்டி இன்று டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

IPL தொடரின் 10 அணிகளும் குறிப்பிட்ட 5 அணிகளுக்கு எதிராக தலா 2 முறையும், 4 அணிகளுக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை 55 ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று 56வது போட்டியில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் அணி அனைத்துப் போட்டிகளிலும் நிலையாகவே விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றிபெற்று 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டுமானால், இனி விளையாடவிருக்கும் போட்டிகளில் ஒன்றில் வெல்ல வேண்டும். ராஜஸ்தான் அணி ஸ்ட்ராங்காக இரண்டாம் இடத்தில் இருந்தாலும், கொஞ்சம் கவனம் தவறினாலும், அந்த அணியை கீழே தள்ளிவிட்டு அடுத்த இடங்களில் இருக்கும் அணிகள் மேலே வந்துவிடும். ஆகையால், ராஜஸ்தான் அணிக்கு இன்றைய வெற்றி அவசியம். அப்போதுதான் ப்ளே ஆஃபை உறுதி செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?
Rishab Pant and Sanju Samson

டெல்லி அணியை பொறுத்தவரை, சற்று தடுமாறியே வருகிறது. இனி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே முதல் நான்கு இடங்களுக்கு முன்னேற முடியும். ஆகையால், ராஜஸ்தான் அணியை விட, இந்தப் போட்டி டெல்லி அணிக்கே மிகவும் முக்கியம். இந்த சீசனில் டெல்லி மைதானத்தில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. மூன்றிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 220-க்கு மேல் ரன்கள் குவித்து வெற்றிபெற்றுள்ளன. ஆகையால், இன்றைய ஆட்டத்தில் டாஸ் மிகவும் முக்கியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com