MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

MI Vs SRH
MI Vs SRH

IPL தொடரின் 55வது போட்டி, இன்று மும்பை அணி மற்றும் ஹைத்ராபாத் அணி இடையே வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மும்பை மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வென்று, 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்றது. அதேபோல் ஹைத்ராபாத் அணி 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று, 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. ஹைத்ராபாத் அணி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகள் வென்றது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதிய கடைசி ஐந்து போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் ஹைத்ராபாத் அணி ஒரு பலம் வாய்ந்த அணியாகவே இருந்து வருகிறது. கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று, சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஹைத்ராபாத்தின் அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஹைத்ராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 277/3 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.

மும்பை வான்கடே ஆடுகளம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது. ஆடுகளம் தட்டையாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களை இங்கு எளிதில் அடிக்கின்றனர். எனினும், கடைசியாக அந்த மைதானத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை அணி இடையே நடைபெற்ற போட்டியில் தலைகீழாக மாறியது. பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ஆனால், பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார். ஆகையால், இன்றைய போட்டியைக் கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
“தொடர்ந்து போராடுவேன்” – தோல்வியை சந்தித்த மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா!
MI Vs SRH

இன்றைய வெற்றி கணிப்புப்படி, மும்பை இந்தியன்ஸ் வெல்ல 53 சதவீதம் வாய்ப்புள்ளது. ஆனால், ஹைத்ராபாத் அணி முழு மூச்சாக இறங்கி விளையாடி வருவதால், மும்பை அணி பெரிய சவாலை சந்திக்க வேண்டும். சமீபக்காலமாக மும்பை அணியின் ஆட்டம் ஒரே மாதிரி இல்லாததால், எப்போது அவர்கள் ஃபார்மின் ஆவர்கள், ஃபார்மவுட் ஆவார்கள் என்றே ரசிகர்களால் கணிக்கவே முடியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com