மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ஐசிசி நிறைய விதிகளை அறிமுகப்படுத்தியது. அதில் Demerit Points என்ற விதியும் அடங்கும்.
Demerit points ஐசிசியால் செப்டம்பர் 2016ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. மைதானத்தில் வீரர்களின் ஒழுங்கீன செயல்களைக் கண்டிக்கும் வகையில் Demerits Points உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு கிரிக்கெட் வீரர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ, ஒருவரை அடிக்கச் சென்றாலோ, செய்கையால் இன்னொரு கிரிக்கெட் வீரரை அவமரியாதை செய்தாலோ இந்த demerit points வழங்கப்படும்.
இந்த புள்ளிகளை 4 வகையாகப் பிரிப்பார்கள். முதலில் 1 மற்றும் 2 புள்ளிகளை சுற்று 1 ஆகவும், 3 மற்றும் 4 புள்ளிகளை சுற்று 2 ஆகவும், 5 மற்றும் 6 புள்ளிகளை சுற்று 3 ஆகவும், 7 மற்றும் 8 புள்ளிகளை சுற்று 4 ஆகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் 2 வருடங்களில் 4 புள்ளிகளை ஒரு வீரர் பெற்றுவிட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதாவது ஒரு டெஸ்ட் தொடரிலும் இரண்டு டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள்.
இதுவே இரண்டு வருடங்களில் 8 Demerit points களையும் பெற்றுவிட்டால் தண்டனையும் இரட்டிப்பாக்கப்படும். ஒரு வீரர் demerit செயல்கள் செய்வதை சுட்டிக்காட்டி புள்ளிகளைக் கொடுக்க உதவுவது நடுவரே.
சுற்று 1 ன் முறையற்ற செயல்கள்:
1. பந்து மற்றும் மட்டைப் பந்தை சரியாக பிடிக்காமல் இருந்தால்,
2. தகாத சொற்கள் பேசினால்,
3. நடுவர் விதிமுறைகளை மதிக்காமல் இருந்தால்,
4. அதீத கோபத்தினால் கைகள் மூலமோ விரல்கள் மூலமோ முறையற்ற சைகைகளை செய்தால்,
இந்த சுற்றில் இடம் பெறுவர்.
சுற்று 1 மற்றும் 2:
1. தகாத வீண் கருத்துக்களைத் தெரிவித்தால்,
2. நடுவர் முடிவை அவமானப்படுத்தினால்,
3. சக வீரர்களையோ துணை ஊழியர்களையோ தகாத இடத்தில் தொட்டால்,
இந்த சுற்றில் இடம் பெறுவர்.
சுற்று 3:
பந்தை தவறான முறையில் பிடித்தால் மூன்றாம் சுற்றில் இடம் பெருவர்.
சுற்று 3 மற்றும் 4:
சக வீரர்களையோ, பார்வையாளர்களையோ, துணை ஊழியர்களையோ தாக்கினால் சுற்று 3 மற்றும் 4ல் இடம்பெறுவர்
சுற்று 1, 2, 3, 4:
கிரிக்கெட் விளையாட்டையே அவமானப் படுத்தி ஏமாற்றி விளையாடினால் இந்த இறுதி சுற்றில் இடம்பெறுவர்.
ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற வகையில் சுற்றுகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். சமீபத்தில் கூட இந்திய வீரர் பூம்ராவுக்கு Demerit Points வழங்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஜனவரி 29ம் தேதி நடைபெற்றது. அப்போது பந்து வீசிய பூம்ரா இங்கிலாந்து வீரர் ஒலி பாப் ரன் ஓடுகையில் அவரை ஓட விடாமல் பூம்ரா குறுக்கே வந்து நின்றுக்கொண்டார். இதனால் பூம்ரா ஒரு புள்ளிகளுடன் சுற்று 1ல் இருக்கிறார்.