இந்திய அணி விளையாடிய மைதானம் தகர்ப்பு… அமெரிக்கா இப்படி செய்ய காரணம் என்ன?

America Ground
America Ground
Published on

இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகள் விளையாடிய மைதானத்தை, அமெரிக்கா தற்போது உடைத்தெறியும் பணியைத் தொடங்கியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகளின் சில போட்டிகளை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டது. ஆகையால், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருந்த சில போட்டிகளை அமெரிக்காவிற்கு மாற்றியது.

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் மோதுகின்றன. அதில் இந்தியா உட்பட சில அணிகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அணிகளாகும். அதனால், இந்த அணிகளுக்கு மட்டும் தனியாக தற்காலிகமாக ஒரு மைதானம் அமைக்க அமெரிக்கா திட்டம்போட்டது. ஏற்கனவே இரண்டு மைதானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கட்டமைத்த தற்காலிக மைதானம், வெறும் 106 நாட்களில் உருவானது. இந்த மைதானத்தில் உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட இந்திய அணி தனது மூன்று குரூப் சுற்று போட்டிகளில் பங்கேற்றது. இதில் தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே அமெரிக்காவில் இந்திய அணி மற்றும் அமெரிக்க அணி ஆடிய போட்டிகள் பரவலாக பேசப்பட்டது.

இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளுமே உலக அளவில் பேசப்பட்டது. தற்போது நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து போட்டிகளும் முடிந்துள்ளது. இந்த நிலையில் அந்த தற்காலிக மைதானம் அகற்றப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரு மரத்துக்கு இருக்கும் ஊக்கம் உங்களுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்!
America Ground

இந்த மைதானம் நியூயார்க் மாகாணத்தின் நாசா கவுண்டி என்ற பகுதியில் உள்ளது. அங்குள்ள ஐசன் ஓவர் பூங்காவைச் சேர்ந்த இடத்தில் தான் மைதானம் அமைக்கப்பட்டது. அங்கு கோல்ஃப் விளையாட்டுகான மைதானம் இருந்தது. மேலும் அது சுற்றுலா தளமாகவும் விளங்கியது.

தற்போது அனைத்து போட்டிகளுமே முடிவடைந்த நிலையில், மைதானத்தைத் தகர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் அங்கு இருக்கும் நான்கு பிட்ச்களும் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com