IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!

Irfan Pathan
Irfan Pathan

நடப்பு ஐபிஎல் தொடருக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி, இந்தாண்டு ஓய்வுப்பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கேப்டன் பதவியிலிருந்து மட்டும் விலகினார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன்ஸி ருதுவிடம் கொடுக்கப்பட்டது. தோனி அணியில் சாதாரண வீரராக இருந்து ருதுவையும் அணியையும் வழி நடத்தி வருகிறார். இதனால், தோனியின்  மேற்பார்வையில் ருதுவின் கேப்டன்ஸி சிறப்பாக உள்ளதாகவே கூறப்படுகின்றது.

இனி ருதுதான் சென்னை அணியின் நிரந்தர கேப்டன் என்பது ரசிகர்களின் கருத்து. இதுபற்றி சென்னை அணி நிர்வாகமும் எதுவும் கூறவில்லை. இருப்பினும், தற்போது இர்பான் பதான், “அனைவரும் இது ருதுவின் நிரந்தர கேப்டன்ஸி என்று நம்பி வரும் நிலையில், அவரது கேப்டன்ஸி பதவி பறிக்கப்படலாம்.” என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் பல பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அல்லது அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றால், அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.

“ஒருவேளை சென்னை அணி வெற்றிபெறவில்லை என்றால், ஜடேஜாவின் கேப்டன்ஸி பறிக்கப்பட்டது போல இவரின்  கேப்டன்ஸியும் பறிக்கப்படும்.” என்று பதான் கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டார். முதல் எட்டு போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. அதன்பின் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன்ஸி பறிக்கப்பட்டு, மீண்டும் தோனியே சென்னை அணியின் கேப்டன் ஆனார்.

இதையும் படியுங்கள்:
இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!
Irfan Pathan

“அதே போன்ற நிலை மீண்டும் வரக்கூடும். சிஎஸ்கே அணியில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. புதிய கேப்டன் தலைமையில் அந்த அணி விளையாடுகிறது. தோனி அந்த அணியின் கேப்டன் இல்லை. எனவே சிஎஸ்கே அணி இக்கட்டான நிலையில் இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியை ருதுராஜ் வெற்றிபெற வைக்க வேண்டும்." என பதான் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com