தோனிக்கு நெருக்கமான வீரர்கள் அணியிலிருந்து நீக்கம் – கம்பீர் மீது புகார்!

தோனிக்கு நெருக்கமான வீரர்கள் அணியிலிருந்து நீக்கம் – கம்பீர் மீது புகார்!
Published on

இலங்கை இந்திய தொடரில், இந்திய அணியின் வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் தோனியின் ஆதரவு வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை. இதனால், வீரர்களை தேர்வுசெய்த பயிற்சியாளர் கம்பீர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

கவுதம் கம்பீருக்கும் தோனிக்கும் இடையே இருக்கும் பிரச்சனை ஊர் அறிந்தது. கம்பீர் வெளிப்படையாக  பேசுபவர். ஒரு போட்டியின் தோல்விக்கு இவர்தான் காரணம் என்று யாராக இருந்தாலும் கூறுபவர். மைதானத்தில் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரை எதிர்த்து சண்டைக்கு நிற்பவர். அப்படிப்பட்டவர் சில காலமாக நல்விதமாக பேசிப் பழகி வருகிறார். குறிப்பாக தோனியிடம் கூட பொது இடங்களில் நட்போடு பேசுகிறார்.

ஏன்? விராட்டுடனும் கைக்குழுக்கி சிரித்துப் பேசுகிறார். இதனால், சரி தலைவன் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் நினைக்கும் சமயத்தில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

அதாவது கம்பீர் இதுவரை இந்திய அணியில் ஒரு பவர்ஃபுல் இடத்தில் இல்லை. ஆனால், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்குதான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதுபோல, வருவதற்கு முன்னரே சில கட்டுப்பாடுகளை விதித்துதான் பதவிக்கே ஒப்புக்கொண்டார்.  இதுவரை அடைத்து வைத்திருந்த மொத்த எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் இறக்கும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.

அதாவது தோனியின் ஆதரவு வீரர்கள் என்று எண்ணப்படும் வீரர்கள் அனைவரையும் இந்திய அணியிலிருந்து கொத்தாக தூக்கிவிட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஏன்? சப்ஸ்ட்டிட்யூட் வீரராக கூட வைக்கவில்லை. அதேபோல் அணியில் தோனியின் நெருங்கிய நண்பர் ஜடேஜாவும் இல்லை.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை!
தோனிக்கு நெருக்கமான வீரர்கள் அணியிலிருந்து நீக்கம் – கம்பீர் மீது புகார்!

இதேபோன்று பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் தற்போது ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐருடன் நீக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு t20 , ஒருநாள் என இரண்டு போட்டிகளிலுமே இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷனுக்கு சொந்த ஊர் ஜார்கண்ட். தோனி, ஹர்திக் பாண்டியா உடன் எப்போதுமே பார்ட்டியில் ஈடுபடுவார்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ஓய்வு வேண்டும் என கூறியிருப்பதாலும், ஆல் ரவுண்டர் இடத்திற்கு ஆள் இல்லை என்பதாலும் சிவம் துபே மட்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஒரேடியாக தோனியுடன் நெருங்கி பழகுபவர்கள் மூன்று பேரை அணியிலிருந்து நீக்கியது ரசிகர்களுக்கு  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com