பல் போனால் சொல் போச்சு என்கிற பழமொழி உண்டு. நமது பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய் தான். வாயை 'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் மிக மிக அவசியம்.
பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல. இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக் கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில் தான் பிரதிபலிக்கும்.
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி தெரியுமா ? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி தெரியுமா? இந்த மூலிகை பற்பொடியினை செய்து தினமும் பல்லை துலக்கி சுத்தம் செய்து வாருங்கள்...அப்பும் பாருங்க உங்கள் பற்கள் பளபளவென மின்னும்.
தேவையான பொருட்கள்:
1. கடுக்காய்
2. நெல்லிக்காய்
3. தான்றிக்காய்
4. ஆலம்பட்டை
5. வேலம்பட்டை
6. கிராம்பு
7. இலவங்கம்
8. இந்துப்பு
இது அத்தனையும் பொடி செய்து தினமும் பல்துலக்கி வந்தால் பற்கள் அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்ற முன்னோர்களின் பழமொழிக்கு இணங்க பற்களுக்கு உறுதியை தரக்கூடிய ஆலம்பட்டை , கருவேலம்பட்டை இரண்டையும் இதில் முக்கியமாக செய்து செய்யுங்கள்.
தினசரி காலை எழுந்தவுடன், இரவு உணவுக்குப்பின் பல் துலக்க வேண்டும். எப்போது சாப்பிட்டாலும், வெந்நீர் அல்லது கல்லுப்பு கலந்த வெந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக் கூடாது. அழுத்தியும் தேய்க்கக்கூடாது. இனிப்புகள், குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை அதிகமாக உட்க்கொள்ளக்கூடாது.
இந்த மூலிகை பற்பொடியின் பயன்கள்:
1. பல் வலி உடனடியாக நீங்கும்
2. பல் கூச்சம் குறையும்
3. வாய் துர்நாற்றம் நீங்கும்
4. பற்சொத்தையை போக்கும்
5. பற்களில் உள்ள கறைகளை அகற்றும்
6. ஈறுகளுக்கு பலம் தரும்
7. இரத்தம் வடிதல் , சீழ் வடிதல் கட்டுப்படும்