செரிமான பொடி செய்வது எப்படி தெரியுமா?

செரிமான பொடி செய்வது எப்படி தெரியுமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

வெந்தயம். – 250gm

ஓமம் – 100gm

கருஞ்சீரகம் – 50gm

செய்முறை:

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல்வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டலில் சேமிக்கவும் இக்கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெது வெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப் படுகிறது. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

செரிமான பொடி பயன்கள்:

  • தேவையான கொழும்பு எரிக்கப் பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.

  • இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

  • இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

  • இருதயம் சீராக இயங்குகிறது.

  • சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப் படுகிறது.

  • நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

  • மலச்சிக்கல் நீங்குகிறது.

  • நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

  • உடலில் உறுதியும், தேக மினு மினுப்பும், சுறு சுறுப்பும் உண்டாகிறது.

  • எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

  • ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

  • கண் பார்வை தெளிவடைகிறது.

  • நீரிழிவு நோய் பராமரிக்கப் படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com