சச்சின் டெண்டுல்கரை 'சார்' என அழைக்கும் பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?

Sachin Tendulkar
Sachin Tendulkar
Published on

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். சக கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு ரசிகராக இருந்தது பெருமையான விஷயமாகும். இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஒருவர் சச்சினை எப்போதும் சார் என்று தான் அழைப்பேன் என தற்போது நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். யார் அந்த பாகிஸ்தான் வீரர்? வாங்க தெரிந்து கொள்வோம்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை பலருக்கும் பிடிக்கும். இவரை ரோல் மாடலாக கருதி பல இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இவர் விளையாடிய காலகட்டத்தில் கூட பல வீரர்கள் இவருக்கு மரியாதை அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்திருக்கும் சச்சின், ஓய்வு பெற்ற பிறகு குடுத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் சயீத் அஜ்மல், கிரிக்கெட் மீதான தனது கருத்தையும், சச்சின் மீதான தனது மரியாதையையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஷார்ஜாவில் குளோ ஃபேன்ஸ் ஹை ஸ்கூல் கிரிக்கெட் கோப்பையின் அறிமுக விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய சயீத் அஜ்மல், “சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகச்சிறந்த வீரர். உலகில் மிக நேர்மையான வீரர்களில் இவரும் ஒருவர். மிகவும் அன்பான நபரும் கூட. இவரைப் போன்ற ஒரு லெஜன்ட் வீரருடன் சேர்ந்து விளையாடியது எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும். பலருடைய மரியாதைக்கும், புகழுக்கும் உரித்தானவர் சச்சின்.

“சச்சின் சார்” போன்ற வேறொருவரைக் காண்பதே அரிது. அவரை நான் எதிர்த்து விளையாடிய போது அவுட் செய்தது, எனக்கு பெருமை மிகுந்த மகிழ்ச்சியான தருணமாகும். சச்சினுக்கு எதிராக நான் விளையாடிய போதெல்லாம் மனிதார்த்த உணர்வுடனும், மரியாதையுடனும் தான் விளையாடுவேன். விளையாடும் போது என்றும் நான் கோபப்பட்டதே இல்லை. ஒரு லீக் தொடரில் சச்சினுடன் சேர்ந்து ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு 2010 ஆம் ஆண்டு கிடைத்தது. அப்போது என்னிடம் பந்தைக் கொடுத்து, தூஸ்ரா முறையில் பீட்டர்சனை அவுட் செய் எனக் கூறினார். நானும் அவ்வாறே செய்ய மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் சச்சின்.

சச்சின் டெண்டுல்கருக்கு எப்போதுமே எங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அவரைப் போன்ற மனிதர்களைக் காண்பது மிகவும் அரிது. இதனாலேயே எப்போது அவரைப் பார்த்தாலும் நான் “சார்” என்று தான் அழைப்பேன்” என சயீத் அஜ்மல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி இந்த விஷயத்தில் கில்லி - ஹர்பஜன் சிங் புகழாரம்!
Sachin Tendulkar

2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான சயீத் அஜ்மல் அந்நாட்டுக்காக 6 ஆண்டுகள் மட்டுமே விளையாடினார். இருப்பினும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 178 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது பௌலில் ஆக்சன் த்ரோ முறையில் உள்ளது என புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆக்சனை மாற்றி மீண்டும் வந்து பந்து வீசினார். இருப்பினும் முன்பிருந்த அளவிற்கு அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதால், விரைவிலேயே ஓய்வு பெற்று விட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com