விராட் கோலி இந்த விஷயத்தில் கில்லி - ஹர்பஜன் சிங் புகழாரம்!

Virat Kohli
Virat Kohli
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி ஃபிட்னஸில் அதிக கவனத்தை செலுத்தக் கூடியவர். அதனால் தான் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், கோலியின் ஃபிட்னஸ் குறித்து ஹர்பஜன் சிங் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி எதிரணிகளை திணறடிக்கும் வகையில் விளையாடும் திறன் கொண்டவர். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடத்தை மிகச் சிறப்பாக நிரப்பியவர் கோலி. அதற்கேற்ப சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்துக் கொண்டே வருகிறார். விரைவில் சதத்திற்கு சதம் கண்ட சச்சினின் இமாலய சாதனையை விராட் கோலி முறியடிப்பார் எனத் தெரிகிறது. இந்திய அணியில் விராட் கோலி விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அவரது ஃபிட்னஸ் சிறப்பாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

ஒரு விளையாட்டு வீரருக்கு ஃபிட்னஸ் தான் மிக முக்கயம். புதுமுக வீரர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு விளையாட நினைத்தால், எப்போதும் அவர்கள் ஃபிட்னஸில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விராட் கோலி திகழ்கிறார். இப்போது அணியில் இருக்கும் வீரர்கள் காயத்தினால் தங்களுக்கான வாய்ப்பை இழப்பதுண்டு. ஆனால் விராட் கோலி இதற்கு மாறானவர். தொடர்ந்து விளையாடும் போது அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வாரே தவிர, காயத்தினால் எந்தப் போட்டி வாய்ப்பையும் அவர் இழந்தது கிடையாது.

நடந்து முடிந்த டி20 போட்டியில் லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதியில் சரியாக விளையாடாத கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக்கோப்பைத் தொடரிலும் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

சாதனைகள் படைக்கப்படுவதும், தகர்க்கப்படுவதும் இங்கு காலங்காலமாக நிகழ்ந்து வருபவை. இதில் எதைச் செய்வது என்றாலும் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விராட் கோலியின் ஃபிட்னஸ் அபாரமாக உள்ளது எனப் பாராட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த 6 இந்திய வீரர்கள்!
Virat Kohli

இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடர்ந்து பல ஆண்டுகளாக விராட் கோலி இந்திய அணியில் விளையாடி வருவதற்கு முக்கிய காரணம் அவரது ஃபிட்னஸ் தான். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் 19 வயது வீரரை விடவும் விராட் கோலியின் ஃபிட்னஸ் சிறப்பாக இருக்கிறது. இவரது ஃபிடன்ஸ் காரணமாக இன்னும் 5 ஆண்டுகள் இந்திய அணியில் கோலி விளையாடுவார் எனத் தெரிகிறது. இளம் வீரர்களுக்கு கோலி முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தற்போதைய இந்திய அணியில் ஃபிட்னஸ் விஷயத்தில் கோலி தான் கில்லி” என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியல் சிறந்த பேட்டராக அறியப்படும் கோலி, ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட. விராட் கோலியின் ஃபிட்னஸ் பற்றி ஒரு கிரிக்கெட் ரசிகராக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிட்டுச் செல்லுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com