முதல் போட்டியில் ரசிகர்களுக்கு அழுத்தம் ஏற்படும்... ஆனால்!! – விராட் கோலி!

Virat kohli
Virat kohli
Published on

சாம்பியன்ஸ் ட்ராபியின் முதல் போட்டி எந்த அளவுக்கு முக்கியம் என்று விராட் கோலி பேசியிருக்கிறார்.

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் ஆரம்பமானது. அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி பயிற்சிக்காக முன்பே துபாய் சென்றுவிட்டது. அந்தவகையில் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. வங்கதேசத்தை எதிர்க்கொள்கிறது இந்திய அணி.

8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து சண்டையிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆண் சிங்கங்களே! பெண்களுக்கு உங்கள பிடிக்கணுமா? 'சாணக்ய நீதி' சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!
Virat kohli

இதுகுறித்து இந்திய அணி வீரர் விராட் கோலி பேசியிருக்கிறார். “சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகிறது. ஒரு தொடராக இது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நாம் ஒரே மாதிரி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் டாப் எட்டு இடத்தை பிடிக்க முடியும். அதன் மூலம் இந்த தொடருக்கு நாம் தகுதி பெற முடியும்.

இந்த தொடரில் எப்போதுமே கடும் சவால்களும் போட்டியும் நிறைந்திருக்கும். ஒரு டி20 உலக கோப்பையில் எவ்வளவு நெருக்கடி ஏற்படுமோ அதை போல் ஒரு நாள் போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இருக்கும். நாம் மூன்று லீக் போட்டிகளில் விளையாடுவோம்.

இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்தால், பார்க்கும் ரசிகர்களும் கடும் மன அழுத்தத்திற்கு ஆழாவார்கள். ஏனெனில், இதில் வரும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியம். மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் முதல் போட்டிகளில் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.” என்று விராட் கோலி பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உளவியல் சொல்லும் ரகசியம்: நண்பர்களை ஈஸியாக உருவாக்குவது எப்படி?
Virat kohli

இன்று மதியம் 2.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியாவின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது.

இதனையடுத்து வரும் 23ம் தேதி இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com