பஞ்சுமெத்தையில் ஃபீல்டிங் பயிற்சி… பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

Pakistan Team
Pakistan Team
Published on

பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியின்போது பஞ்சு மெத்தைப் பயன்படுத்தியது, இந்திய ரசிகர்களை மட்டுமல்ல உள்நாட்டு ரசிகர்களையே கிண்டல் செய்ய வைத்துவிட்டது. அவர்கள் ஏன் அதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங்கில் என்னத்தான் சூப்பராக விளையாடினாலும், ஃபீல்டிங்கில் முன்னேறியப்பாடு இல்லை என்றே சொல்ல வேண்டும். அது பாகிஸ்தான் ரசிகர்களே வருத்தப்படும் ஒரு விஷயம். கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில்கூட அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம். பந்து பறந்து வந்து அழகாக கையில் விழுந்தாலும், தடுமாறி அந்தக் கேட்சை விடுபவர்கள் பாகிஸ்தான் வீரர்கள்.

இந்த மைனஸை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன் ட்ராஃபி தொடரில் ப்ளஸாக மாற்ற வேண்டும் என்று நினைத்து இப்போதிலிருந்தே பயிற்சி செய்து வருகின்றனர். கராச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பாகிஸ்தான் வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த பயிற்சியில்தான் ஃபீல்டிங்கிற்கு பஞ்சு மெத்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தரையில் கீழே விழுந்தால் உடலில் காயம் ஏற்படும் என்பதால், பஞ்சு மெத்தையில் தாவி விழுந்து ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சினிமாவில் ஆக்ஸன் காட்சிகள் எடுக்கும்போதும், கீழே விழும் காட்சிகள் எடுக்கும்போது எப்படி மெத்தைப் பயன்படுத்துவார்களோ? சிறு குழந்தைகள் மெத்தையிலிருந்து கீழே விழக்கூடாது என்று கீழே ஒரு பஞ்சு மெத்தைப் பயன்படுத்துவார்களோ? அதேபோல்தான் இந்த வீரர்கள் அதனை வைத்து பயிற்சி செய்கிறார்கள். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள், ஒரு கேட்சைப் பிடிப்பதற்காக எங்கிருந்தோ வேகமாகப் பறந்தும் விழுந்தும் பிடிப்பார்கள். இதனால், கண்முண் தெரியாமல் பெரிய அளவில் அடிப்படும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ஜிகா வைரஸ் பரவல் எச்சரிக்கை… அறிகுறிகள் என்ன?
Pakistan Team

சண்டைன்னு வந்துட்டா சட்ட கிழியத்தான் செய்யும் என்பது நம்ம பையன் புத்தி சார்…

ஆனால், மீசையில் ஒட்டாமல் கூல் குடிக்க வேண்டும் என்பது அவர்களின் புத்தி சார்…

அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் இந்த பஞ்சு மெத்தை என்று கிரிக்கெட் வட்டாரத்தினரும் ரசிகர்களும் கூறுகின்றனர்.

ஆனால், யோசித்துப் பாருங்களேன்… இந்தப் பயிற்சியின்போது அடிபட்டு, முக்கிய போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்று கூட அவர்கள் பஞ்சுமெத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com